பொழுதுபோக்கு

கேம் சேஞ்சருடன் பிரம்மாண்ட இயக்குனர் பிறந்தநாள் கொண்டாட்டம்

இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாளை ‘கேம் சேஞ்சர்’ குழுவினருடன் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என கொண்டாடப்படுபவர் இயக்குனர் ஷங்கர். புதிய தொழில்நுட்பங்களை தனது படங்களில் புகுத்தி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறார்.

எப்போதும் தனது படங்களில் பிரம்மாண்ட காட்சிகளை கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார். தற்போது ‘இந்தியன் 2’ மற்றும் தெலுங்கில் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

shankar

தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் ஷங்கர், தனது 60வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி திரையுலகை சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரம் ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ‘கேம் சேஞ்சர்’ குழுவினர் ஷங்கருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிகழ்வில் நடிகர் ராம் சரண், தயாரிப்பாளர் தில் ராஜூ உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

shankar

சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் இயக்குனர் ஷங்கர், ‘வசந்தராகம்’, ‘சீதா’ உள்ளிட்ட சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே ரசிகர்களை கவர ஜீன்ஸ், அந்நியன், இந்தியன், நண்பன், எந்திரன், முதல்வன், 2.O என தொடர்ந்து பல படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக வந்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content