திருகோணமலையில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞர் – நடந்தது என்ன?
திருகோணமலை- ஜமாலியா, தக்வா நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் கடந்த 23ஆம் திகதி திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்தார். குறித்த இளைஞர் ஜமாலியா கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் பணத்தை திருடியதாக கூறி 21 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து 22 ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதையடுத்து மறுநாள் 23ஆம் திகதி வரை குறித்த இளைஞரை தலைமையக பொலிஸார் நீதிமன்றில் […]













