பொழுதுபோக்கு

நடிகர் மாரிமுத்துவின் இறுதி நிமிடங்கள்… வீடியோ வெளியானது…

  • September 9, 2023
  • 0 Comments

நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து நெஞ்சை பிடித்தபடி வெளியில் வரும் காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்டு நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் அவர் இறுதியாக டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து நெஞ்சை பிடித்தபடி வெளியில் வரும் காட்சிகளும், நெஞ்சு வலியுடன் அவர் தாமாக காரை ஓட்டிச் செல்லும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி

இலங்கையில் மழையுடனான வானிலை : ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

  • September 9, 2023
  • 0 Comments

நாடு முழுவதும் 14 மாவட்டங்களில் 6,300 க்கும் மேற்பட்ட மக்கள் தென்மேற்கு பருவமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக   பேரிடர் மேலாண்மை மையம் (டிஎம்சி) தெரிவித்துள்ளது. அறிக்கைகளின்படி, மோசமான வானிலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட 4,300 க்கும் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் படி, மேல் […]

ஐரோப்பா

அக்ஷர்தாம் கோயிலுக்குச் செல்கிறார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்!

ஜி20 உச்சி மாநாட்டிற்காக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஞாயிற்றுக்கிழமை டெல்லி அக்ஷர்தாம் கோயிலுக்குச் செல்ல உள்ளார். இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9, மற்றும் 10 ஆம் திகதி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சனிக்கிழமையே தலைநகர் டெல்லிக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் பிரகதி அரங்கத்தில் கூட்டம் தொடங்கியது. பாரத மண்டபம் பகுதியில் அனைத்து நாட்டின் தலைவர்களையும் […]

இந்தியா

ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது

ஊழல் வழக்கில் தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் புலனாய்வு காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.317 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் ஞானபுரம் நந்தியாலா டவுன் பகுதியில் உள்ள ஆர்கே ஹாலில் இன்று (சனிக்கிழமை) காலை 6 மணியளவில் […]

செய்தி

மொரோக்கோ நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரிப்பு!

  • September 9, 2023
  • 0 Comments

வட ஆபிரிக்காவின் மொராக்கோ மாநிலத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 820 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும், சுமார் 600 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான குறித்த நிலநடுக்கத்தால் பாரிய பொருள், உயிர் சேதம் எற்பட்டுள்ளது. இதில்  யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நகரமாக அறிவிக்கப்பட்டுள்ள பழைய மாரகேஷ் நகரமும் சேதமடைந்துள்ளது. நிலநடுக்கத்தின் இடிபாடுகளால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் […]

செய்தி

புலம் பெயர் தொழிலாளர்களுக்கான வீட்டுத்திட்டம் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள கருத்து!

  • September 9, 2023
  • 0 Comments

வெளிநாட்டு வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான உத்தேச வீட்டுத் திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இந்த திட்டம் குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் மனுஷ நாணயகார,  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக, புலம்பெயர் தொழிலாளர்களின் வீட்டுத் தேவைகள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, இனங்காணப்பட்ட பிரச்சினைகளை […]

இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட அமெரிக்கா

கனடாவின் கால்கரி நகரில் பயங்கர நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள 142 குழந்தைகள்

  • September 9, 2023
  • 0 Comments

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரில், குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகங்களில் பயங்கர நோய்க்கிருமி ஒன்றின் பரவல் காரணமாக 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகங்களில் விடப்பட்ட குழந்தைகள் 142 பேர், ஈ கோலை என்னும் பயங்கர கிருமியால் பாதிக்கப்பட்டுளதாக, ஆல்பர்ட்டா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.அவர்களில் 26 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் அவர்களில் சில குழந்தைகளுக்கு டயாலிசிஸ் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.சிறுநீரகம் பாதிக்கப்படும்போதுதான் இந்த […]

இலங்கை

கஹவத்தை வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் நாட்டை விட்டு வெளியேற்றம்! நோயாளர்கள் பாதிப்பு

இரத்தினபுரி, கஹாவத்தை ஆதார வைத்தியசாலையின் கண் வைத்தியர் உரிய அறிவித்தல் இன்றி நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பல நோயாளிகள் கைவிடப்பட்டுள்ளனர். அதன்படி, மருத்துவர் சென்றதால் மருத்துவமனையின் கண் சிகிச்சைப் பிரிவில் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் நாளாந்தம் 150 – 100 கண் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதுடன், வாரத்தின் ஆறு நாட்களும் கண்சிகிச்சை ‘கிளினிக் தினங்களாக’ குறிப்பிடப்பட்டுள்ளது, இதனால் ஏற்பட்டுள்ள கடும் அசௌகரியம் காரணமாக மாற்று கண் வைத்தியரை கஹவத்தை வைத்தியசாலைக்கு கொண்டு […]

இந்தியா உலகம்

G20 அமைப்பில் இணைந்தது ஆப்பிரிக்க ஒன்றியம்.. (Video)

  • September 9, 2023
  • 0 Comments

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு இன்று தொடங்கியது. பிரதமர் மோடி துவக்க உரையாற்றினார். அப்போது ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி20 அமைப்பின் நிரந்தர நாடாக முன்மொழிந்தார். உலகத் தலைவர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி, “உங்கள் அனைவரின் ஆதரவுடன், ஆப்பிரிக்க யூனியனை ஜி20 அமைப்பில் சேர அழைக்கிறேன்” என்றார். இதையடுத்து ஆப்பிரிக்க ஒன்றிய தலைவர் அசாலி அசோமணியை, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அழைத்து வந்தார். ஜி20 தலைவர்களுக்கான இருக்கை வரிசையில் ஆப்பிரிக்க ஒன்றிய தலைவருக்காக தனி […]