பொழுதுபோக்கு

சாய் பல்லவிக்கு திருமணம்? உண்மை வெளியானது…

  • September 20, 2023
  • 0 Comments

நடிகை சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், சாய் பல்லவிக்கு திருமணம் நடந்துவிட்டதாக வைரலான போட்டோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமானவர் சாய் பல்லவி. முதன்முறையாக மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். மலர் டீச்சர் கேரக்டரில் நடித்து ரசிகர்களை வசீகரித்த சாய் பல்லவி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக […]

இலங்கை

திலீபனின் நினைவேந்தல் பவனி : இன முரண்பாட்டை தோற்றுவிப்பதாக குற்றச்சாட்டு!

  • September 20, 2023
  • 0 Comments

திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனி ஊடாக இன முரண்பாடு தோற்றம் பெறும் நிலை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (20.09) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  திலீபனின் நினைவேந்தல் தற்போது அனுஸ்டிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக திலீபன் இருந்தாலும் அவர் அஹிம்சை வழியில் போராடி இறுதியில் உயிர் தியாகம் செய்தவர். அவருடைய உருவப்படத்தை சுமந்த வண்ணம் ஊர்தி பவனி […]

இலங்கை

இலங்கையின் பல மாகாணங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

  • September 20, 2023
  • 0 Comments

இலங்கையின் பலப்பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி  காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறிப்பாக காலி மாவட்டத்தின் அல்பிட்டிய மற்றும் நாகொட பிரதேச செயலக பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் பிரதேச செயலக பிரிவுகளுக்கும், தொடம்கொட, அங்கலவத்தை, மத்துகம, வல்லவிட்ட, தெஹியோவிட்ட, கேகாலை மாவட்டம், புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை மற்றும் தெரணியகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் […]

இலங்கை விளையாட்டு

தசுன் பதவி நீக்கம்- இன்று மாலை புதிய தலைவர் நியமனம்

  • September 20, 2023
  • 0 Comments

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி-20 அணிகளின் தலைவராக இருந்த சகலதுறை வீரர் தசுன் ஷானக்கவை எதிர்வரும் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கு தசுன் ஷானக்க இன்று (20) காலை அழைக்கப்பட்டதாகவும் அங்கு அவர் தலைமைத்துவத்தை விட்டு விலக விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவர் இன்று(20) மாலை நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.

இலங்கை

சமந்தா பவர் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணிலுக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

  • September 20, 2023
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் (USAID) நிர்வாக அதிகாரி  சமந்தா பவருக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்று (19.09)  இடம்பெற்றது. இதன்போது இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடி நிலையின் போது சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனம் வழங்கிய ஆதரவிற்காக  சமந்தா பவருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து சுருக்கமாக  விளக்கமளித்த ஜனாதிபதி, அதனை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் எடுத்துக் […]

இலங்கை

இலங்கை ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதமருக்கு இடையில் சந்திப்பு!

  • September 20, 2023
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று (19.09) இடம்பெற்றுள்ளது. இதன்போது  கடனை செலுத்துவதில் இலங்கை படிப்படியாக அடைந்து வரும் பொருளாதார முன்னேற்றம் வெளிப்படுவதாகவும், அது தொடர்ந்தால் இலங்கையின் நிலை சிறப்பாக இருக்கும் என்றும் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். சவாலான காலகட்டத்தில் இலங்கைக்கு பங்களாதேஷ் காட்டிய ஆதரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க இந்த வருட […]

இலங்கை

IMF பிரதிநிதிகளிடம் மகஜர் கையளித்த தொழிற்சங்க குழு!

  • September 20, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் இன்று (20.09) சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்தது. குறித்த மகஜரில், வரிக்கொள்கையை திருத்தியமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கவனம் செலுத்தவில்லை என்றால், எதிர்காலத்தில் கடுமையான போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இதேவேளை, வாழ்க்கைச் செலவு கட்டுப்படியாகாத வகையில் அதிகரித்துள்ள நிலையில், அனைத்து உழைக்கும் வர்க்க மக்களுக்கும் 20,000 ரூபா கொடுப்பனவை கோரி போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய தொழிற்சங்க நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை

திருகோணமலை – 22ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ள அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்

  • September 20, 2023
  • 0 Comments

வைத்தியத்துறையில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்து எதிர்வரும் 22ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (20) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய கால கட்டத்தில் வைத்தியத்துறை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன்,வைத்திய சாலைகளில் போதிய மருந்துகள் பற்றாக்குறையாக காணப்படுகிறது, விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் இன்மையால் பொதுமக்கள் நாளாந்தம் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கையில் கோடாரியுடன் சாலையில் சுற்றிய பெண்ணுக்கு நேர்ந்த கதி..!

  • September 20, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலிய பொலிஸாரல் ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நியூகாசில் பகுதியில் இளம்பெண் ஒருவர் கையில் கோடாரி ஒன்றுடன் சாலையில் சென்று கொண்டு இருந்த பொதுமக்களை துரத்தி மிரட்டி வருவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கையில் கோடாரியுடன் சுற்றித் திரிந்த பெண்ணை சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சித்தனர். ஆனால் அந்த பெண் பொலிஸாரையும் கோடாரியால் தாக்க முற்பட்டதால் […]

இலங்கை

இலங்கையில் நிர்வாண ஒளிப்படங்களுடன் சிக்கிய இளம் பிக்கு!

  • September 20, 2023
  • 0 Comments

இலங்கையில் சிறுவர், சிறுமியரின் நிர்வாண ஒளிப்படங்களை விற்பனை செய்து கிரிப்டோ கரன்சி மூலம் பணம் சம்பாதிக்கும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். ராகமை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் சிறுமிகளின் நிர்வாணக் காட்சிகள் அடங்கிய படங்களை விற்பனை செய்து வருவதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. அவர் குறித்த படங்களை விற்பனை செய்து கிரிப்டோகரன்சி மூலம் பணம் சம்பாதிப்பதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டிற்கு அமைய நேற்று (19.09) அப்பகுதிக்கு சென்ற புலனாய்வு […]