இந்தியா

இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தை மூட நடவடிக்கை!

  • October 1, 2023
  • 0 Comments

இந்தியாவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூதரகத்தின் செயல்பாடுகளை மேற்கொள்வதில் இராஜதந்திர ஆதரவின்மை மற்றும் பணியாளர்கள் மற்றும் வளங்களின் பற்றாக்குறை போன்ற சிக்கல்களால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், ஆப்கானிஸ்தான் பிரஜைகளுக்கான தூதரக சேவைகளை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தலிபான் அரசாங்கத்தை இந்தியா அங்கீகரிக்கவில்லை, மேலும் காபூலில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திரும்பப் பெறப்பட்டனர். […]

இலங்கை

பல இலட்சம் பெறுமதியான மீன் பிடி உபகரணங்கள் திருட்டு: ஒருவர் கைது

மன்னார் பள்ளிமுனை மீனவர் ஒருவரின் மீன் வாடியில் இருந்து சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி மீன் பிடி உபகரணங்களை திருடிச் சென்ற குற்றச்சாட்டில் கற்பிட்டியில் வைத்து சந்தேக நபர் ஒருவரை மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை(30) கற்பிட்டியில் வைத்து சந்தேக நபரிடம் இருந்து மீன் பிடி உபகரணங்களை மீட்டுள்ளதோடு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, […]

இலங்கை

மன்னார்- முருங்கன் பகுதியில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸூடன் ஒருவர் கைது

  • October 1, 2023
  • 0 Comments

மன்னார் – முருங்கன் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மன்னார் முருங்கன் பகுதியில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பாரிய ஐஸ் போதைப்பொருள் கடத்தல் வெற்றிகரமாக சுற்றிவளைக்கப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 25 இலட்சம் ரூபா பெறுமதியான 178.75 கிராம் நிறை கொண்ட ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடத்தலில் […]

இலங்கை

எட்டு பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்துள்ள திருகோணமலை நீதிமன்றம்

  • October 1, 2023
  • 0 Comments

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறாம் கட்டை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கு திருகோணமலை நீதிமன்றம் எட்டு பேருக்கு எதிராக தடைவுத்தரவு பிறப்பித்துள்ளது.இத்தடை உத்தரவினை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பி.அன்பார் வழங்கியுள்ளார். நிலாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி கல்லெலுகே தொன் பிரதீப் நிஷாந்தகுமார திருகோணமலை நீதிமன்றத்திற்கு 1979ம் ஆண்டு 15ம் இலக்க 106/1 என்ற சட்டத்தின் பிரகாரம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. திருகோணமலை-இலுப்பை குளம் பொரலுகந்த ரஜமஹா விகாரை நிர்மாண பணிகளை முன்னெடுக்க வேண்டாம் என கிழக்கு மாகாண […]

பொழுதுபோக்கு

D 50 ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வருகின்றது… வெளியான புதிய அப்டேட்

  • October 1, 2023
  • 0 Comments

தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் டிசம்பர் 15ம் தேதி வெளியாகிறது. கேப்டன் மில்லரை தொடந்து தனுஷ் தனது 50வது படத்தில் நடித்து வருகிறார். D 50 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை தனுஷ் இயக்குவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், D 50 படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என இயக்குநர் சுப்ரமணிய சிவா அப்டேட் கொடுத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் D 50 படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதம் தொடங்கி தொடர்ந்து […]

ஐரோப்பா

துருக்கி பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் வெடிப்புச் சம்பவம்!

  • October 1, 2023
  • 0 Comments

துருக்கி பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அங்காராவில் உள்ள பாராளுமன்ற வளாகம் மற்றும் துருக்கிய உள்துறை அமைச்சகத்திற்கு அருகாமையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இது தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும், அந்த இடத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை

தெற்காசியாவிலேயே அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடுகளின் பட்டியிலில் இடம்பிடித்த இலங்கை!

  • October 1, 2023
  • 0 Comments

மின் கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள நிலையில்,  உத்தேச மின்சாரக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால், தெற்காசியப் பிராந்தியத்தில் அதிக மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் என எரிசக்தி ஆலோசகர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய கூறியுள்ளார். தெற்காசியாவில் அதிகூடிய மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட முதல் மூன்று நாடுகளில் இலங்கை தற்போது இடம்பிடித்துள்ளதாக அவர்  சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மின்சார உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்கும் வகையில் புதிய முறையொன்றை அவசரமாக அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகம்

பனாமா கால்வாயில் பயணம் செய்யும் கப்பல்கள் எண்ணிக்கை குறைப்பு!

  • October 1, 2023
  • 0 Comments

பனாமா கால்வாய் வழியாக பயணம் செய்யும் கப்பல்களின் அதிகபட்ச எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி நாள் ஒன்றுக்கு பயணம் செய்யும் கப்பல்களின் எண்ணிக்கை 31 ஆக குறைகப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நிலவிய கடும் வரட்சி மற்றம் நீரின் அளவு குறைவடைந்தமை கப்பல் குறைக்கப்பட்டமைக்கு பெருமளவில் தாக்கம் செலுத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கையில் கிரிகெட்டின் வளர்ச்சிக்காக குழுவொன்று நியமனம்!

  • October 1, 2023
  • 0 Comments

இலங்கையில் கிரிக்கெட்டின் வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை பாதுகாப்பதற்காகவும், கண்காணிப்பதற்காகவும், 03 பேர் கொண்ட சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்துள்ளார். அதன்படி, குறித்த குழுவில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சிதத் வெட்டிமுனி, இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் சட்ட ஆலோசகர் ரகித ராஜபக்ஷ ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இந்தக் குழு, “இலங்கையில் கிரிக்கெட்டின் வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் […]

செய்தி

லியோ குறித்து மிகப்பெரிய இயக்குநர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி

  • October 1, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் நடிப்பில் இந்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள படம் லியோ. படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் பிரபல இயக்குநர் கௌதம் மேனன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். மிஷ்கின், அர்ஜூன் உள்ளிட்டவர்கள் விஜய்யுடன் மல்லு கட்டுவது டீசர், கிளிம்ப்ஸ் உள்ளிட்டவற்றின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் கௌதம் மேனன் விஜய்க்கு சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே படம் சூப்பராக […]