இலங்கை

மன்னார்- முருங்கன் பகுதியில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸூடன் ஒருவர் கைது

மன்னார் – முருங்கன் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மன்னார் முருங்கன் பகுதியில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பாரிய ஐஸ் போதைப்பொருள் கடத்தல் வெற்றிகரமாக சுற்றிவளைக்கப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 25 இலட்சம் ரூபா பெறுமதியான 178.75 கிராம் நிறை கொண்ட ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடத்தலில் ஈடுபட்ட முக்கிய வியாபாரி அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளது டன் கடத்தலை மேற்கொண்ட முருங்கன் பிட்டி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய நபர் மற்றும் கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்