முல்லைத்தீவில் பொதுமுடக்கம்! பல சேவைகள் ஸ்தம்பிதம்!
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா மீதான அச்சுறுத்தலின் மூலம் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட முடியாத நிலமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல், செயற்பாடுகளிற்கு கண்டனம் தெரிவித்தும் வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு முல்லைத்தீவில் முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது. அந்தவகையில் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் நடமாட்டம் மிககுறைவாக காணப்பட்டது. இதேவேளை அரச பேருந்து சேவைகள் வழமைபோல இடம்பெற்றிருந்ததுடன், தனியார் பேருந்துச்சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது. இதேவேளை பாடசாலைகளில் பரீட்சை இடம்பெற்று வருகின்றமையால் கல்விச்செயற்பாடுகள் வழமைபோல […]













