வவுனியாவில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு கௌரவிப்பு
வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 2022ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 131 மாணவர்களினை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது. வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக பிரதம விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்தியம் முழங்க மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். தொடர்ந்து தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவான […]













