சில்லுனு ஒரு காதலை அழுது கெடுத்த ஜோதிகா…. இது என்ன புது கதையா இருக்கு
ஜோதிகாவின் அழுகை சில்லுனு ஒரு காதலை கெடுத்துவிட்டதாக இயக்குநர் கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் மின்னலே, காக்க உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிருஷ்ணா சில்லுனு ஒரு காதல் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 2006ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா, வடிவேலு, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது அந்தப் படம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து அவளை இழந்திருக்கும் ஹீரோவுக்கும், காதலித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கொள்கையில் […]













