நடுவீதியில் வைத்து பொலிஸ் அதிகாரியை நையப்புடைத்த கும்பல்!-வைரலான வீடியோ
பொலிஸ் அதிகாரி ஒருவரை கும்பல் நடுரோட்டில் வைத்து பயங்கரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், மஹோபா மாவட்டத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரை சாலையில் வைத்து ஒரு கும்பல் கம்பு போன்ற ஆயுதங்களால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.அடி பொறுக்க முடியாமல் அந்த அதிகாரி, கையை வைத்து முகத்தை மறைத்தும் அவர் முகத்தில் அவர்கள் குத்துவதையும், கால்களால் மிதிப்பதும் அந்த வீடியோவில் பார்ப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மஹோபா காவல் துறை கண்காணிப்பாளர் அபர்ணா சிங், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். மேலும் பொலிஸை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெவித்துள்ளார்.
பொலிஸார் நடத்திய விசாரணையில் ”மஹோபாவில் வேகமாக வந்த அரசு பேருந்து மோதியதில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் அப்பகுதியில் போராட்டம் நடத்த முயற்றுள்ளனர்.
அவர்களை சமாதானப்படுத்த முயன்ற பொலிஸ் அதிகாரியை போராட்டத்தில் ஈடுபட்ட சில வாலிபர்கள் நடுரோட்டில் வைத்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
நடுரோட்டில் வைத்து பொலிஸ் அதிகாரியை ஒரு கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.