தமிழர் தாயகத்தினை கபளீகரம் செய்து இந்த நாடு பௌத்த நாடு என்பதை நிரூபித்து நிற்கின்றது: தவத்திரு வேலன் சுவாமிகள்
சிங்கள பௌத்த மக்களை காட்டுமிரண்டித்தனமாக பின்னால் இருந்து மாற்றும் சக்திகளை இந்த பேரினவாத அரசு கண்டும் காணாமல் இருந்துவருவதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். ”சிங்கள பிக்கு ஒருவர் தமிழர்களை வெட்டிக்கொல்வேன் என அடாவடியாக சொல்லிக்கொண்டிருக்கும்போது அவருக்கு எதிராக இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவுமில்லை,கைதுசெய்யப்படவுமில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சித்தாண்டியில் கடந்த 55வது நாளாகவும் மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு […]













