நாடு முழுவதும் கடும் வறட்சி – 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
எல் நினோ நிகழ்வால் ஏற்பட்ட வறண்ட வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த 81,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பேரிடர் மேலாண்மை மையம் (டிஎம்சி) தெரிவித்துள்ளது.
அத்துடன் 23 பிரதேச செயலக பிரிவுகள் தண்ணீர் பற்றாக்குறையால் தவிப்பதாகவும், அவர்களுக்கு நீர் வழங்க பிரேதச சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
அதன்படி, 23,048 குடும்பங்களைச் சேர்ந்த 72,153 மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மொனராகலை மாவட்டத்தில் அதிகபட்ச அளவில் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளில் 10,264 குடும்பங்களைச் சேர்ந்த 33,023 மக்களுக்குக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் 9,547 குடும்பங்களைச் சேர்ந்த 28,523 மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில், இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள, பாதிக்கப்பட்ட 2,537 குடும்பங்களைச் சேர்ந்த 7,882 பேருக்குக் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.




