இலங்கையில் மூடப்படும் நிலையில் உள்ள 95 வைத்தியசாலைகள்!
இலங்கையில் வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு, 95 வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருட காலத்துக்குள் சுமார் 1500 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளமையே இதற்கான காரணமாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் கடந்த (8.11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், […]













