கப்பல்களிடம் வரி வசூலிக்கும் சட்டத்திற்கு ஈரான் நாடாளுமன்றக் குழு ஒப்புதல்
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்க தெஹ்ரானை அனுமதிக்கும் சட்ட வரைவுக்கு ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழு, ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் இந்த சட்டவரைவு தொடர்பில் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
முந்தைய கூட்டத்தில் பரிசீலனையில் இருந்த 3-வது பிரிவுக்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்ததாக குழுவின் செய்தித் தொடர்பாளர் ஹசன் காஷ்கவி Hassan Qashqavi கூறினார்.
இந்தப் பிரிவு, ஜலசந்தியில் வழங்கப்படும் வழிசெலுத்தல் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள், சிறப்பு நேர்வுகளில் எரிபொருள் விநியோகம், காப்பீடு, பாதுகாப்பு மற்றும் பிற சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கிறது என்றும் அவர் கூறினார்.
ஜலசந்தி வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்ட நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்களிடமிருந்து இந்தக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு, ஈரானிய ரியால் அல்லது தெஹ்ரானால் குறிப்பிடப்பட்ட மற்றொரு நாணயத்தில் செலுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.




