ஆசியா

பாகிஸ்தானுக்கு 02ஆவது தவணை கடனை வழங்க IMF முடிவு!

  • November 18, 2023
  • 0 Comments

பாகிஸ்தானுக்கு 02ஆவது தவணை கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது. இதன்படி இரண்டாம் தவணையாக 700 மில்லியன் டொலர்கள் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமீபத்தில், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் 03 பில்லியன் டொலர்களை வழங்கியது. சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் இரண்டாவது தவணையை வழங்க முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகம்

துருக்கிய ஜனாதிபதி ஜேர்மனிக்கு பயணம்

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஜேர்மனிக்கு ஒரு சுருக்கமான பயணத்தை மேற்கொண்டுள்ளார். காசாவில் போர் தொடர்பாக இரு நேட்டோ நட்பு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான வேறுபாடுகளுக்கு மத்தியில் எந்தஅவரது பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது எர்டோகன் இஸ்ரேலை ஒரு “பயங்கரவாத நாடு” என்று அழைத்தார் மற்றும் “நாங்கள் இஸ்ரேலுக்கு எதுவும் கடன்பட்டிருக்கவில்லை, எனவே நாங்கள் சுதந்திரமாக பேச முடியும்,” என்று எர்டோகன் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. எர்டோகன் தனது மறுதேர்தலுக்குப் பிறகு பல மாதங்களுக்கு முன்பு […]

இலங்கை

யாழில் ஊபர், பிக்மி ஓட்டும் சாரதிகளுக்கு அச்சுறுத்தல்?

  • November 18, 2023
  • 0 Comments

யாழில் செயலி மூலம் முச்சக்கரவண்டி செலுத்தும் சாரதி ஒருவர் மீது தரிப்பிட சாரதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் யாழ் திருநெல்வேலி பழம் வீதி அருகில்  பதிவாகியுள்ளது. இந்நிலையில் தாக்குதல் சம்பவம் குறித்து முறைப்பாடு வழங்க பொலிஸ் நிலையம் சென்றபோதும், பொலிஸாரும் அச்சுறுத்தும் வகையில் நடந்துக்கொண்டதாக பாதிக்கப்பட்ட சாரதி கவலை வெளியிட்டுள்ளார். யாழில் முச்சக்கரவண்டி சாரதிகள் அதிகவிலைக்கு சவாரி செல்கின்றனர். இந்நிலையில், பிக்மி, ஊபர் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி மக்கள் சவாரிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்காரணமாக தரிப்பிட […]

மத்திய கிழக்கு

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சில பகுதிகளில் கனமழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

  • November 18, 2023
  • 0 Comments

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சில பகுதிகளில் பெய்த கனமழையால்,  துபாய் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழையைத் தொடர்ந்து, போக்குவரத்து மற்றும் விமான நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் குடியிருப்பாளர்கள் கடற்கரை செல்வதை தவிர்க்குமாறும், வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. துபாய் முழுவதும் பெய்த கனமழையின் காட்சிகளை மக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். இதேவேளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதிக மழை எதிர்பார்க்கப்படுவதால், மழைநீரை வெளியேற்றுவதற்கான ஆயத்த திட்டத்தை துபாய் நகராட்சி செயல்படுத்தியுள்ளது. […]

ஐரோப்பா

சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசை வென்ற உக்ரைன் யுவதிகள்

லண்டனில் நடந்த விழாவில், மூன்று உக்ரைன் யுவதிகளுக்கு இந்த ஆண்டுக்கான சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசு வழங்கப்பட்டது. போரில் இருந்து தப்பிச் சென்ற குழந்தைகளுக்கான செயலிகளை உருவாக்கியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் முதன்முறையாக இங்கிலாந்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அகதி குழந்தைகளுக்காக ஒரு செயலிகளை உருவாக்கியதற்காக சோபியா தெரேஷ்சென்கோ,அனஸ்டாசியா ஃபெஸ்கோவா,மற்றும் அனஸ்டாசியா டெம்செங்கோ ஆகியோருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில் ரஷ்யாவால் நாடு ஆக்கிரமிக்கப்பட்டபோது, ​​மொபைல் செயலியை உருவாக்கும் திட்டத்தில் சோஃபியா […]

ஐரோப்பா

ரஷ்யாவின் முன்னாள் நிதியமைச்சர் தேடப்படுபவர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்!

  • November 18, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் உள்துறை அமைச்சகம், ரஷ்யாவின் முன்னாள் துணை ஆளுநராகவும், துணை நிதியமைச்சராகவும் இருந்த செர்ஜி அலெக்சாஷென்கோவை தேடப்படும் பட்டியலில் சேர்த்துள்ளதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனங்களான TASS தெரிவித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யாவின் போரை விமர்சித்த அலெக்சாஷென்கோ, ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அரசாங்கத்துடன் முறித்துக் கொண்டு அமெரிக்காவில் நாடுகடத்தப்பட்ட நிலையில், “வெளிநாட்டு முகவராக” நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் அலெக்சாஷென்கோ உள்துறை அமைச்சகத்தின் தேடப்படும் பட்டியலில் கிரிமினல் குற்றச்சாட்டின் பேரில் சேர்க்கப்பட்டதாக TASS தெரிவித்துள்ளது. இதேவேளை ரஷ்ய சட்டமியற்றுபவர் Vasiliy […]

இலங்கை

புதிய சுகாதார செயலாளராக டாக்டர் பாலித மஹிபால நியமனம்?

சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த ஓய்வு பெறுவதால் அவரின் சேவைக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த சுகாதார செயலாளராக டொக்டர் பாலித குணரத்ன மஹிபால நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சுகாதார செயலாளராக டொக்டர் மஹிபால திங்கட்கிழமை (20) கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டாக்டர் மஹிபால இதற்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றினார். அவர் ஏப்ரல் 2019 இல் பாகிஸ்தானில் WHO பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

மத்திய கிழக்கு

காசாவின் எதிர்காலம் குறித்து இஸ்ரேல் வெளியிட்டுள்ள கருத்து!

  • November 18, 2023
  • 0 Comments

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஒழிக்கும் பணியில் இஸ்ரேல் வெற்றி பெற்ற பிறகு, காசாவின் எதிர்காலம் குறித்து அரபு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்  என ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார். சர்வதேச அமைப்பிற்கான இஸ்ரேலிய தூதுவர், ஹமாஸுக்குப் பிந்தைய காசாவை நிர்வகிப்பது குறித்து அரபு நாடுகளுடன் உரையாடல்கள் தொடங்கவில்லை, ஆனால் இதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் இணைந்து காசாவை நிர்வகிக்கும் ஒரு இடைக்கால தீர்வு பற்றி ஐக்கிய […]

பொழுதுபோக்கு

வீட்டில் Chill பண்ணும் தளபதி விஜய் – வீடியோ செம வைரல்

  • November 18, 2023
  • 0 Comments

தளபதி விஜய் வெளிநாட்டில் நடந்த தனது 68வது பட பணிகளை முடித்துவிட்டு அண்மையில் சென்னை திரும்பினார். இந்நிலையில் அவரது வீட்டு தோட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி உள்ளது. லியோ பட வெற்றி விழாவை முடித்து நேரடியாக தாய்லாந்து சென்ற தளபதி விஜய், சில தினங்களுக்கு முன்பு தனது படபிடிப்பு பணிகளை தாய்லாந்தில் முடித்துவிட்டு சென்னை திரும்பினார். இந்நிலையில் தளபதி விஜய் தனது வீட்டில் தன்னுடைய செல்ல பிராணிக்கு உணவு வழங்கும் வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் […]

இலங்கை

இலங்கையில் அத்தியாவசிய சேவையாகும் மின்சார விநியோகம் : வர்த்தமானி வெளியீடு!

  • November 18, 2023
  • 0 Comments

இலங்கையில் மின்சார விநியோகம், கனியவள உற்பத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் பகிர்வு என்பவை அத்தியாவசிய சேவைகளைாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய குறித்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பிலான வரித்தமானியை  ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வெளியிட்டுள்ளார்.