தெற்கு சூடானில் பயங்கரம்! குடிசைகளுக்குள் வைத்து 32 பேர் உயிருடன் எரித்துக்கொலை
தெற்கு சூடான் எல்லையில் அமைந்துள்ள அபெய் கிராமத்தில் 32 பேர் குடிசைகளுக்குள் வைத்து உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சூடான் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஐ-நா மேற்பார்வையில் சூடான், தெற்கு சூடான் என இருநாடுகளாக கடந்த 2011ம் ஆண்டு பிரிக்கப்பட்டது.எண்ணெய் வளம் இருப்பதாக கருதப்பட்ட எல்லையோர பகுதியான அபெய் கிராமம், தெற்கு சூடான் கட்டுப்பாட்டில் இருந்து வந்தாலும், ஐ.நா அமைதிப்படையினர் தொடர்ந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது […]













