யாழ் சிறையில் உயிரிழந்த இளைஞன் – மருத்துவ அறிக்கையில் தெரியவந்த அதிர்ச்சி
களவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழந்தமைக்கு இயற்கையான முறையில் மரணிக்க மருத்துவ காரணங்கள் எவையும் இல்லை என்றும் சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும் சடலத்தின் அடி வயிற்று பகுதியில் அடி காயங்கள் காணப்படுவதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உடற்கூற்று பகுதிகளை உடற்கூறு மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கவும் மருத்துவ அறிக்கையில் சட்ட வைத்திய அதிகாரி சிபாரிசு செய்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் இன்று நண்பகல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் […]












