இலங்கை

கல்முனையில் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பெண்னொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரியது தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (21.11)  பெண்னொருவர் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்வதற்கு வருகைதந்துள்ளார். குறித்த பொலிஸ் நிலையத்தில் சிறுகுற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குறித்த பெண்ணிடம் பாலியம் இலஞ்சம் கோரியுள்ளார்.

இதனை தொடர்ந்து இது தொடர்பில் குறித்த பெண்ணால் இலஞ்ச ஒழிப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் கல்முனை நகரில் மாறுவேடத்தில் வந்துள்ளனர். அத்துடன் குறித்த உப பொலிஸ் பரிசோதகரை  கல்முனையில் உள்ள உல்லாசவிடுதி ஒன்றுக்கு வருமாறு கூறியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பொலிஸ்  உத்தியோகத்தர் அங்கு சென்று விடுதி அறைக்குள் சென்றபோது குறித்த பெண் மலசல கூடத்திற்குள் இருந்து இலஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அங்கு வந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைதுசெய்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.

அங்கு விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதனைத் தொடர்ந்து நீதிமன்றிற்கு கொண்டுசென்று நீதிமன்ற கட்டளையைப்பெற்று கொழும்புக்கு கொண்டுசெல்ல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவித்தன.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்