மத்திய கிழக்கு

ஹமாஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் பிரதமர் உத்தரவு!

  • November 24, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாட்களுக்கு போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாட்டிற்கு பிரதமர் நேதன்யாஹு உத்தரவிட்டுள்ளார். யூதர்களுக்கு எதிராக செயல்பட்ட ஹிட்லரின் நாஜிப்படை தளபதிகள், ஈரான் நாட்டு அணுசக்தி விஞ்ஞானிகள், பாலஸ்தீன தலைவர்கள் என பலரை வெளிநாடுகளில் வைத்து மொஸாட் உளவாளிகள் கொலை செய்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உள்ளன. ஹாமாஸ் தலைவர்கள் பலர் கத்தார், லெபனான் போன்ற நாடுகளில் இருந்தபடி […]

இலங்கை

வவுனியாவில் குளங்கள் நிரம்பி வழிவதால் கவலையில் விவசாயிகள்!

  • November 24, 2023
  • 0 Comments

வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக வவுனியாவில் மொத்தமுள்ள 639 குளங்களில் 415 குளங்கள் நிரம்பி வழிவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ. சரத்சந்திர தெரிவித்தார். வவுனியாவில் பாவற்களம் உட்பட விவசாய சேவைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள 415 குளங்கள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குளங்கள் நிரம்பி வழிவதால் வவுனியா மகாகன்னாவில் பயிரிடப்பட்டிருந்த பெருமளவிலான நெற்செய்கைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு மக்களின் […]

ஆசியா

சீனாவில் அச்சுறுத்தும் சுவாசத் தொற்று – தகவல் கோரும் WHO

  • November 24, 2023
  • 0 Comments

சீனாவில் சுவாசத் தொற்று நோய்கள் அதிகரித்துவருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டிருக்கின்றது. அது தொடர்பான முழுமையான விவரங்களை வழங்குமாறு பெய்ஜிங்கிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சுவாசத் தொற்றில் இருந்து பாதுகாக்கும் தடுப்பு முறைகளைக் கடைப்பிடிக்குமாறும் சீன மக்களுக்கு சுகாதார நிறுவனம் ஆலோசனை தெரிவித்துள்ளது. சுகாதார நிறுவனத்தின் X (Twitter) சமூகவலைத் தளத்தில் இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். தடுப்பு நடவடிக்கைகளுக்காக சுவாச நோய்கள் குறிப்பாக சிறுவர்களிடையே அதிகரித்துவருகின்ற சளிச் சுரம் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Check the facts – வாட்ஸ்அப்பின் புதிய முயற்சி!

  • November 24, 2023
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சாதனமான வாட்ஸ்அப் பொய் பரப்புரைக்கு எதிராக புதிய செயலியை உருவாக்கி உள்ளது. மேலும் ஒரு மாத காலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறது. உலகின் மிக முக்கிய தொலைத் தொடர்பு நிறுவனமாக வாட்ஸ்அப் உருவெடுத்து இருக்கிறது. பல்வேறு விதமான தகவல்கள், பல கோடி கணக்கான பயனாளர்கள், தகவல்களை பரிமாற பல்வேறு வழிகள் என்று வாட்ஸ்அப் நாளுக்கு நாள் மிகப்பெரிய அளவில் விரிவடைந்து வருகிறது. வாட்ஸ்அப்பின் மூலம் எண்ணற்ற தகவல்களை உடனுக்குடன் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

  • November 24, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவான முறையிலும் யூதர்களுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது இவ்வாறான ஆர்ப்பட்டக்காரர்களுக்கு எதிராக பல கருத்துக்கள் ஜெர்மன் நாட்டில் முன்வைக்கபட்டுள்ளது. அதாவது யூதர்களுக்கு எதிரான எண்ணங்களை கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல அரசியல் வாதிகள் தெரிவித்து வருகின்றார்கள். இதனடிப்படையில் ஜெர்மனியின் ஆளும் கூட்டு கட்சி பிரதான் கூட்டு கட்சியான SPD கட்சியுடைய முக்கிய அரசியல் பிரமுகர் ஒரு கருத்தை வெளியிடுகையில், அதாவது ஜெர்மன் நாட்டில் […]

ஆசியா

சிங்கப்பூரில் அதிரடி நடவடிக்கை – 80,000 தொலைபேசி எண்களுக்கு தடை!

  • November 24, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் ScamShield செயலி கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, சுமார் 80,000 தொலைபேசி எண்களை தடை செய்துள்ளது. அத்துடன் அந்த எண்களை, தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்த்துள்ளது. அத்துடன் சுமார் 5 மில்லியன் குறுஞ்செய்திகளை மோசடித் தகவல் என செயலி அடையாளம் கண்டுள்ளது. ScamShield செயலி சென்ற மாத நிலவரப்படி 750,000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. செயலியில் மேம்பாடுகள் செய்யப்படுகின்றது. நச்சு நிரல்களை அடையாளம் காணும் மற்ற செயலிகளுக்கு ScamShield ஆதரவாகச் செயல்படுகிறது. நச்சு நிரல்களை அடையாளம் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவன்

  • November 24, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பாடசாலை மாணவன் ஒருவன் தனது பாடசாலைக்கு கொக்கைன் போதைப்பொருளை எடுத்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பாகியுள்ளது. பாடசாலை இடைவேளை நேரத்தின் போது குறித்த மாணவன் தனது புத்தகப்பையில் இருந்து குறித்த கொக்கைன் போதைப்பொருள் பொதியை வெளியே எடுத்துள்ளார். இதனைக் கண்காணித்த ஆசிரியர், உடனடியாக அதனை பறித்து எடுத்துக்கொண்டுள்ளார். பின்னர் பொலிஸாருக்கு அழைத்துள்ளார். குறித்த பொருள் என்னவென தெரியாத குறித்த மாணவன், அதனைத் தமது வீட்டின் தோட்டத்தில் உள்ள மரம் ஒன்றின் கீழே இருந்து கண்டெடுத்ததாக தெரிவித்துள்ளார். பொலிஸார் […]

இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

  • November 24, 2023
  • 0 Comments

கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத. அம்பதலை நீர் விநியோகத் தொகுதியில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இன்று மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரையிலான 16 மணிநேர நீர் விநியோகத் தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகள் நீர் விநியோகம் […]

சீனாவில், வீட்டை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் அபராதம்

  • November 23, 2023
  • 0 Comments

    சிச்சுவான் மாகாணம் தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ளது. ஆசிய கண்டத்தின் மிக நீளமான நதியான யாங்சே சிச்சுவான் பகுதி வழியாக பயணிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. புகே உள்ளூராட்சி பகுதி சிச்சுவான் மாகாணத்தின் தெற்கில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ளாட்சி அமைப்புகள் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளன. இந்தச் சட்டத்தின்படி, வீடுகளில் பாத்திரங்களைக் கழுவாமல், தூய்மையற்ற படுக்கைகளில், உணவுப் பொருட்களைப் பயன்படுத்தும் போது சுகாதாரமற்ற நிலையில் இருப்பவர்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படும். பொது மற்றும் குடியிருப்பு சுகாதாரம் பற்றிய […]

இலங்கை செய்தி

இலங்கையில் 2,000 நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட தரமற்ற பரிசோதனை

  • November 23, 2023
  • 0 Comments

சுமார் 2,000 நோயாளிகளுக்கு புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் தரமற்ற வகை தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனை குறிப்பிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் மருந்தை சப்ளை செய்த நிறுவனமே தரமற்ற இந்த வகை தடுப்பூசியும் இறக்குமதி செய்யப்பட்டது என்றார். எவ்வாறாயினும், இந்த தடுப்பூசி ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் […]