மட்டக்களப்பில் மாவீரர் துயிலும் இல்ல நினைவு தூபி இடித்தழிப்பு
மட்டக்களப்பு தரவை மாவீரர் இல்லத்தில் அமைக்கப்பட்டு வந்த நினைவு தூபியை பொலிஸார் இன்று வியாழக்கிழமை (23) இடித்து தள்ளியுள்ளனர். சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவருவதாக நீதிமன்ற உத்தரவுடன் சென்று அந்த நினைவு தூபியை பொலிஸார் இடித்து தள்ளியுள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவு தூபி ஒன்றை மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கல்லால் அமைத்து வந்தனர். இந்த நிலையில் இந்த நினைவு தூபி அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டுவருவதாக இதனை உடன் அகற்றுமாறு உத்தரவிடக்கோரிகோரி […]













