வாழ்வியல்

பாதாம் பருப்பை தோலுடன் சாப்பிடலாமா? வேண்டாமா?

  • November 29, 2023
  • 0 Comments

பாதாம் பருப்பை நாம் சாப்பிடுவதில் பல சந்தேகங்கள் இருக்கும். ஒரு சிலர் பாதாம் தோலில் விஷம் உள்ளது. அதை ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும் என கூறுகிறார்கள். சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்படுகிறது. இந்த சந்தேகத்தை போக்கக்கூடிய வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது. கொட்டை வகைகளைச் சேர்ந்த பாதாம் பருப்பு சற்று விலை அதிகமாக இருப்பதால் இதன் சத்துக்களும் அதிகமாக இருக்கும் என மக்கள் கணிப்பில் பார்க்கப்படுகிறது. ஆனால் அப்படி ஒன்றும் இல்லை என பல […]

இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • November 29, 2023
  • 0 Comments

கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் 3,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். தற்போது பெய்து வரும் பருவ மழையுடன் இந்த நிலை உருவாகும் வாய்ப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “கொழும்பில் தற்போது 3,465 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. அவர்களில் 80% டெங்கு என உறுதி செய்யப்பட்டுள்ளது. டிசம்பரில் இது அதிகரிக்கக்கூடும் என்று நாங்கள் அறிவோம். மீண்டும் ஒரு முறை ஒழுங்கற்ற பருவமழை செயல்படுவதை நாங்கள் காண்கிறோம். 7.1 மட்டுமே பார்க்க […]

செய்தி

ஆஸ்திரேலியாவில் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களின் பரிதாப நிலை!

  • November 29, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களில் 53 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்கள் ஊழியர்களின் செலவுகளை அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பணியிடத்தில் இருந்து வேலை செய்வதை காட்டிலும் தேவையான வசதிகளை வழங்குவதில் வீட்டிலிருந்து வேலை செய்வது அதிக செலவாகும் என்று ஊழியர்கள் புகார் கூறுகின்றனர். ஆய்வில் பங்கேற்ற 2,000 ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், வீட்டிலிருந்து வேலை செய்வதால் மின்சாரம், பிரதிகள் அச்சிடுதல் மற்றும் பிற அலுவலக வேலைகளுக்கு கூடுதல் செலவுகள் ஏற்படும் என்று கூறியுள்ளனர். குறிப்பாக அலுவலக […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • November 29, 2023
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மாற்றமடைந்துள்ளது. அதற்கமைய, இன்றைய தினம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.61 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.68 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.70 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

விளையாட்டு

36 பந்தில் 102 ரன்கள்.. சாதனை படைத்த ருதுராஜ்..!

  • November 29, 2023
  • 0 Comments

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டைகளை இழந்து 222 ரன்கள் எடுத்தனர். 223 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 225 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் மேக்ஸ்வெல் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Video call meeting பேசுபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

  • November 29, 2023
  • 0 Comments

அதிகமாக வீடியோ கால் மீட்டிங் பேசுபவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்படும் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வீடியோ கால் என்ற ஒன்று கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு அதிகரித்துவிட்டதை நாம் பார்க்க முடிகிறது. அதிலும் குறிப்பாக வேலை நிமித்தமான வீடியோ கால் மீட்டிங் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இத்தகைய மீட்டிங் மேற்கொள்வதற்கு கூகுள் மீட், ஜூம், மைக்ரோசாப்ட் டீம் செயலிகள் பயன்படுத்தப்படுகிறது. வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்கள் இதுபோன்ற செயல்களில் நாள் முழுவதும் வீடியோ கால் பேசும் சூழல் கூட ஏற்படுகிறது. இதனால் […]

இலங்கை

இலங்கையில் இருந்து நாடு திரும்பவிருந்த சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த கதி

  • November 29, 2023
  • 0 Comments

பாதுகாப்பற்ற ரயில் கடவையின் ஊடாக பயணித்த பேருந்து ஒன்று வஸ்காடு பகுதியில் ரயிலுடன் மோதியதில் இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ரயிலுடன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அளுத்கமவில் இருந்து ஹலவத்தை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் பேரூந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. செக் குடியரசு நோக்கிச் செல்லவிருந்த சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த […]

செய்தி

பிரான்ஸில் சிகரெட் விலையில் ஏற்படவுள்ள பாரிய அதிகரிப்பு

  • November 29, 2023
  • 0 Comments

பிரான்ஸில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் சிகரெட் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிகரெட் பெட்டி ஒன்றின் விலை சராசரியாக 11.14 யூரோக்களாக அதிகரித்திருந்தது. அதன் பின்னர் இவ்வருடத்தில் விலையேற்றம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஜனவரி மாதம் 50 சதங்களால் விலை அதிகரிப்புக்குள்ளாகிறது. சிகரெட் பெட்டியின் விலை சராசரியாக 12 யூரோக்களாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி- சமூக உதவி பணம் பெறுபவர்களுக்கு சிக்கல்

  • November 29, 2023
  • 0 Comments

ஜெர்மன் அரசாங்கம் கடும் நெருக்கடியான நிலைமையை எதிர்கொண்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. கொவிட் காலங்களில் 60 மில்லியன் யூரோக்களை மேலதிக கடனாக பெறுவதாக முடிவு எடுத்து இருந்தது. தற்பொழுது இந்த கடனை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 60 மில்லியன் யுரோ மேலதிக கடன் பெற்றுக் கொள்வதற்கு எதிராக பிரதான வலது சாரி தீவிரவாத கட்சியானது உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. கடந்த கிழமை உச்ச நீதிமன்றமானது இந்த வழக்கில் ஒரு […]

ஆசியா

சிங்கப்பூர் விமான நிலையத்தில் பயன்பாட்டிற்கு வரும் AI செயற்கை நுண்ணறிவு முறை!

  • November 29, 2023
  • 0 Comments

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பயணிகளின் பாதுகாப்பு சோதனை நேரத்தை குறைக்க முடியுமா என்பதை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாக, AI மற்றும் X-ray படங்களை தரும் இயந்திரத்தையும் பயன்படுத்தி கைப்பெட்டிகளை செக்-இன் சோதனை செய்யும் முறையை சாங்கி விமான நிலையம் சோதனை செய்து வருகிறது. இதனால் விமான நிலைய அதிகாரிகளின் செயலாக்க நேரம் குறையும் என்றும், மனித பிழையின் சாத்தியக்கூறுகளையும் அது குறைக்கும் எனவும் […]