பாகிஸ்தானில் உள்ள இராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் – 23 பேர் பலி
பாகிஸ்தானில் உள்ள இராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இது தற்கொலை குண்டுத் தாக்குதல் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள இ ராணுவ முகாம்தான் இத்தகைய தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பலர் சிவில் உடை அணிந்திருந்தவர்கள் எனவும், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. […]












