இலங்கை

பொலிசாரின் அடாவடித் தனத்தினை கண்டித்து மாபெரும் கண்டன போராட்டம்: மக்களுக்கு அழைப்பு

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவியினை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் பொலிசாரின் அடாவடித்தனத்தினை கண்டித்து எதிர்வரும் 08.01.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலத்திற்கு முன்பாக பாரிய ஒரு போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார். அதேவேளை அன்றையதினம் திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று (06.01.2024) […]

இலங்கை

அறிவியலுக்கு முரணான கருத்துக்களை நம்ப வேண்டாம் : இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்!

  • January 6, 2024
  • 0 Comments

அறிவியலுக்கு முரணான கருத்தாக்கங்களை விடுத்து, பிள்ளைகளுக்கு தட்டம்மை தடுப்பூசிகளை வழங்குவதற்கு பெற்றோர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு காரணங்களால் தடுப்பூசி போட மறுத்த 9 மாதங்கள் முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கும் இன்று (06.01) நடைபெற்ற தடுப்பூசி நிகழ்ச்சியில் தட்டம்மை தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, […]

பொழுதுபோக்கு

அட்டகாசமான சிங்கம், ஓநாய் கதை… – தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ ட்ரெய்லர் எப்படி?

  • January 6, 2024
  • 0 Comments

தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார். துப்பாக்கி, தோட்டா, தெறிக்கும் ரத்தம், வெடிக்கும் குண்டு, கருணையில்லா கொலைகள் எல்லாமே அப்படியே அருண் மாதேஸ்வரன் ஸ்டைல். ஆனால் அவரின் முந்தைய படங்களில் இல்லாத வகையில் ஆதிக்கத்துக்கு எதிரான மக்களின் குரலாக இப்படம் இருக்கும் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. […]

ஐரோப்பா

ரஷ்யா 500,000 இராணுவ வீரர்களை இழக்கும் : பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை

இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யா 500,000 இராணுவ வீரர்களை இழக்கும் என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது 2023 ஆம் ஆண்டு முழுவதும் ரஷ்யாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 300 இராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. “அடுத்த வருடத்தில் தற்போதைய விகிதத்தில் எண்ணிக்கை தொடர்ந்தால், ரஷ்யா உக்ரைனில் அரை மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்களை இழந்திருக்கும்.” என்று அறிவித்துள்ளது.

உலகம்

அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட கப்பல் மீட்பு!

  • January 6, 2024
  • 0 Comments

சோமாலியா அருகே அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட லைபீரியாவைச் சேர்ந்த MV Leila Norfolk வணிகக் கப்பலின் பணியாளர்களை மீட்பதில் இந்திய கடற்படை வெற்றி பெற்றுள்ளது. லைபீரிய கொடியுடன் கூடிய கப்பல் ஆயுதம் ஏந்திய குழுவினால் கடத்தப்பட்டதாக பிரிட்டிஷ் கடல்சார் ஏஜென்சிக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, இந்திய கடற்படை வீரர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதில் 21 பணியாளர்கள் உள்ளனர் அவர்களில் 15 பேர் இந்தியர்கள். குறித்த கப்பலும் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

20 வயது பாடகியுடன் இணையும் 44 வயது பிரேம்ஜி? கிடைத்தது பதிலடி..

  • January 6, 2024
  • 0 Comments

இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனின் மகனாகிய பிரேம்ஜி தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி68 படத்தில் நடித்து வருகின்றார். 44 வயதை தாண்டியிருக்கும் பிரேம்ஜி, இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். சரக்கு பார்ட்டி என்று தன்னுடைய நண்பர்களுடன் நாட்களை கழித்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து நடிகைகளின் புகைப்படங்களுக்கு ஹாட்டின் விட்டும் வருகிறார். இந்நிலையில் புத்தாண்டு அன்று இந்த ஆண்டு நான் திருமணம் செய்து கொள்வேன், Dot என்று கூறியிருந்தார். தற்போது அவர் […]

இலங்கை

இலங்கையில் முதல் முறையாக இடம்பெறும் ஜல்லிக்கட்டு போட்டி!

  • January 6, 2024
  • 0 Comments

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லி கட்டு போட்டிகள் இன்று (06.01) ஆரம்பமாகியுள்ளன. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இதில்  அரசியல் பிரமுகர்கள் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சீறி பாயும் காளைகளை அடக்க களம் காணும் வீரர்களின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

உலகம்

இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக 15 சந்தேக நபர்களுக்கு சிறை தண்டனை : துருக்கிய நீதி அமைச்சர்

இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 34 பேரில் 15 பேரை விசாரணைக்காக சிறையில் அடைக்க இஸ்தான்புல்லில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று துருக்கியின் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார் துருக்கியில் வசிக்கும் வெளிநாட்டினரை “உளவு பார்த்தல்” மற்றும் “பின்தொடர்வது, தாக்குவது மற்றும் கடத்துவது” உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டனர். நீதி அமைச்சர் யில்மாஸ் துங்க் ஒரு சமூக ஊடக பதிவில், இஸ்ரேலிய உளவுத்துறை சார்பாக “அரசியல் […]

இலங்கை

இலங்கையில்ன வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதா?

  • January 6, 2024
  • 0 Comments

1000 சிசிக்கு குறைவான எஞ்சின் திறன் கொண்ட வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒரு வருட கால அவகாசம் வழங்கியுள்ளது என்ற செய்தி பொய்யானது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் பொய்யானவை என சங்கத்தின் தலைவர்  இந்திக்க சம்பத் மெரஞ்சிகே தெரிவித்தார்.  

இலங்கை

மட்டக்களப்பு நகரில் திறக்கப்பட்ட தபாலக கட்டிட தொகுதி

மட்டக்களப்பு நகரில் 48 கோடி செலவில் தபாலக கட்டிட தொகுதியை அமைச்சர் பந்துல குணவர்தன திறந்து வைத்தார். நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் தபால் சேவை நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு இந்த மாகாண தபாலக கட்டிட தொகுதி அமைக்கப்பட்டது. அன்றைய தபால்துறை அமைச்சரினால் இந்த கட்டிட தொகுதி வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அன்றைய […]