இலங்கை

பொலிசாரின் அடாவடித் தனத்தினை கண்டித்து மாபெரும் கண்டன போராட்டம்: மக்களுக்கு அழைப்பு

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவியினை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் பொலிசாரின் அடாவடித்தனத்தினை கண்டித்து எதிர்வரும் 08.01.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலத்திற்கு முன்பாக பாரிய ஒரு போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி மரிய சுரேஷ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

அதேவேளை அன்றையதினம் திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று (06.01.2024) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

”எதிர்வரும் திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பொதுக்கூட்டம் காலை 11 மணிக்கு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்தில் நடைபெறவுள்ளது முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்

எங்களுக்கான முடிவுகளை எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் பல நெருக்கடிக்கடிக்கு மத்தியில் நாங்கள் இருக்கிறோம் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளை இல்லாமல் செய்வதற்கு பல வழிகளில் முனைகின்றார்கள். இதனை தடுத்து நிறுத்த வேண்டுமாக இருந்தால் எங்களுக்கான முடிவுகளை நாங்கள் எடுக்க வேண்டும்

இவ்வாறான நிலையில் நாங்கள் ஒன்று கூடுவதற்கு இடங்கள் கேட்டால் இடத்தை தருபவர்களை புலனாய்வுத்துறையினர் அச்சுறுத்துகின்றனர் இடம் கொடுக்காதீர்கள் சாப்பாடு கொடுக்காதீர்கள் என்று
இந்த நிலையில் நாங்கள் யாரிடமும் இடம் கேட்க போகாமல் நாங்களே முடிவெடுத்து எங்களுக்கான இடத்தினை நாங்கள் தெரிவு செய்துள்ளோம்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது அவரின் முன்னால் தான் எங்கள் உறவுளை நாங்கள் கொடுத்தோம். அம்மாள் ஆச்சியின் சாட்சியாக நாங்கள் அந்த இடத்தில் பொதுக்கூட்டம் ஒன்றினை கூட உள்ளோம் இதில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்

இதேவேளை எதிர்வரும் 08.01.2024 காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரிய ஒருபோராட்டத்தினையும் முன்னெடுக்கவுள்ளோம் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவியினை பொலிசார் கைதுசெய்துள்ள நிலையில் தொடரும் பொலிசாரின் அடாவடித்தனத்தினை கண்டித்து இந்த போராட்டத்தினை நடத்தவுள்ளோம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பொலிசார் அடக்குவதையும் நிறுத்த வேண்டும் என்று இந்த போராட்டம் முன்னெடுக்கவுள்ளோம் இதில் தேசியத்திற்காக பயணிப்பவர்கள்,அரசியல் பிரதிநிதிகள்,அமைப்புக்கள் என அனைவரும் அணிதிரண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அழைப்பு” விடுத்துள்ளார்

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்