சிரியாவின் தலைநகர் மீது இஸ்ரேல் திடீர் ஏவுகணை தாக்குதல்; ஐவர் பலி!
சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேல் இன்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 4 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இதில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள 4 மாடி கட்டிடத்தை குறிவைத்து இஸ்ரேல் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், ஈரான், பாலஸ்தீன ஆதரவு […]













