இலங்கை செய்தி

யாழில் போதைப்பொருள் பாவித்த இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், சாவகச்சேரி போலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையான 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

போதைப்பொருள் பாவித்த நிலையில் காணப்பட்ட இளைஞனை உறவினர்கள் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனையின் போது, இளைஞன் ஹெரோயினுக்கு அடிமையானவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் நேற்று (20) குறித்த இளைஞனுடன் போதைப்பொருளை நுகர்ந்த ஏனைய இளைஞர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

அதேவேளை குறித்த இளைஞன் நீண்ட காலமாக போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர் மீண்டும் போதைக்கு அடிமையாகி உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை