உலகம் செய்தி

மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தான் மத்தியஸ்தம்?

  • March 24, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தமது நாடு மத்தியஸ்தம் வகிக்க தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். எனவே, இரு நாடுகளும் சம்மதித்தால், அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். எனினும், இந்த கருத்துக்கு அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பில் இருந்து இன்னும் பதிலளிக்கப்படவில்லை. அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தானுக்கு நட்புறவு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா செய்தி

லண்டனில் யூத ஆம்புலன்ஸ்கள் தீக்கிரையான சம்பவம் – ஈரானிய அரசுக்கு தொடர்பு?

  • March 24, 2026
  • 0 Comments

லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் யூத தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்புலன்ஸ்கள் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பாக, ஈரானிய அரசுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒரு குழுவை மையமாகக் கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என பெருநகர காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் நான்கு ஹட்சோலா ஆம்புலன்ஸ்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வாகனங்களில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் பல வெடிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் மூன்று சந்தேக நபர்கள் ஈடுபட்டதாக காவல்துறை சந்தேகிக்கிறது. […]

இலங்கை செய்தி

வடக்கு ஆளுநரைச் சந்தித்தார் ஐ.நா. பிரதிநிதி!

  • March 24, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (24.03.2026) இச்சந்திப்பு நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் ஆளுநரால் மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முன்னுரிமைத் தேவைகள் குறித்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி, காணிப் பிரச்சினைகள், சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம், மீள்திறன் கொண்ட வாழ்வாதாரம் ஆகிய நான்கு பிரதான விடயங்களின் அடிப்படையில் ஆளுநர் […]

இலங்கை செய்தி

அர்ச்சுனாவுக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு!

  • March 24, 2026
  • 0 Comments

மலையகத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (24) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறுகோரி மலையக சிவில் அமைப்பு பிரதிநிதிகளால் ICCPR சட்டம் (2007, இல. 56) கீழ் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. அர்ச்சுனா ராமநாதன் வெளியிட்ட பொதுக் கருத்துக்கள் மலையகத் தமிழர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், பிரதேச வாதத்தையும் சமூக அமைதியையும் சீர்குலைக்கும் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் கால்நடை மருத்துவச் சேவைகளுக்கு விலை கட்டுப்பாடு – மருந்துச் சீட்டு கட்டணம் எவ்வளவு தெரியுமா?

  • March 24, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் கால்நடை மருத்துவ சேவைகளுக்கான கட்டணங்களை கட்டுப்படுத்தும் புதிய சீர்திருத்தங்களை போட்டி மற்றும் சந்தைகள் ஆணையம் (CMA) அறிவித்துள்ளது. இதன்படி, கால்நடை மருத்துவர்களிடமிருந்து பெறப்படும் எழுத்துப்பூர்வ மருந்துச் சீட்டின் கட்டணம் £21 ஆக நிர்ணயிக்கப்பட உள்ளது. கூடுதல் மருந்துகளுக்கு £12.50 என்ற உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படும். மேலும், கால்நடை மருத்துவமனைகள் தங்களின் சேவைகளுக்கான விரிவான விலைப்பட்டியல்களை வெளியிட வேண்டும் என்றும், £500 ஐ விட அதிகமாக செலவாகும் சிகிச்சைகளுக்கு முன்கூட்டியே எழுத்துப்பூர்வ மதிப்பீடு வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணம் கோரல் – திகதி நீடிக்கப்பட மாட்டாது என அறிவிப்பு

  • March 24, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (24) முதல் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை நிகழ்நிலை ஊடாகக் கோரப்படுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic ஆகிய உத்தியோகபூர்வ இணையதளங்களுக்குச் சென்று, வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றி சரியான முறையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலை மாணவர்கள், தமது பாடசாலை அதிபர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும். தனியார் […]

இலங்கை செய்தி

ஈரானில் புதிய தேசிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்!

  • March 24, 2026
  • 0 Comments

ஈரானின் உயரிய பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய செயலாளராக முகமது பாகர் சொல்காதர் Mohammad Bagher Zolghar நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி பதவியை வகித்த அலி லாரிஜானி Ali Larijani கடந்த 17 ஆம் திகதி போரில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அலுவலகம் இந்த புதிய நியமனம் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. புதிய பொறுப்பை ஏற்கும் சொல்காதர், இதற்கு முன்பு ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை மற்றும் நீதித்துறையில் உயர்மட்ட பதவிகளை வகித்த அனுபவம் கொண்டவர். […]

இலங்கை செய்தி

அடுத்த 03 மாத உரக் கையிருப்பை பேண உர நிறுவனங்கள் இணக்கம்

  • March 24, 2026
  • 0 Comments

அடுத்த 03 மாதங்களுக்குத் தேவையான உரக் கையிருப்பினைச் சந்தையில் பேணுவதற்காக, விவசாய அமைச்சுடன் இணைந்து செயற்பட உர நிறுவனங்கள் ஜனாதிபதியிடம் தமது இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளன. விவசாய அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உர இறக்குமதி நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடன் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே உர நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்தன. மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக விநியோக வலையமைப்பில் ஏற்பட்டுள்ள தடைகளுக்கு மத்தியிலும், இம்முறை சிறுபோக நெற்செய்கை மற்றும் ஏனைய பயிர்களுக்குத் […]

valero-refinery-fire-explosion-smoke-plume-texas-usa இன்றைய முக்கிய செய்திகள் உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து : மக்கள் முடக்கம்!

  • March 24, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணம் போர்ட் ஆர்தர் (Port Arthur) பகுதியில் அமைந்துள்ள பிரபல வலேரோ (Valero) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று காலை பயங்கரத் தீபப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த தீப்பரவல் சம்பவத்தைத் தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பல அடி உயரத்திற்கு தீப்பிழம்புகள் எழும்பியதுடன், பிரதேசம் முழுவதும் கரும்புகையினால் சூழப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிலைமையின் தீவிரத்தை கருத்திற் கொண்டு, நகரின் மேற்குப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் […]

உலகம்

கமேனி மீது தாக்குதல்: டிரம்ப் – நெதன்யாகு ரகசிய திட்டம் அம்பலம்!

  • March 24, 2026
  • 0 Comments

மரணம் அடைந்த ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான தாக்குதலுக்கு முன்னர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ஆகியோருக்கு இடையே நடந்த திட்டமிடல் குறித்த உள்விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வெளிநாட்டு செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு, இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு, அதிபர் டிரம்பைத் தொடர்புகொண்டு, தெஹ்ரானின் தலைமைக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு […]