இலங்கையில் அபாய பகுதிகளில் 300 பாடசாலைகள் – பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
இலங்கையில் மண்சரிவு அபாய பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட பாடசாலைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இதனை தெரிவித்தது. அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த பாடசாலைகள் அமைந்துள்ள பகுதியில் அனர்த்தங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவின் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அத்துடன், மண்சரிவு அதி அபாய பகுதிகளில் பல்வேறு அரச நிறுவனங்களும் காணப்படுவதாக அவர் கூறினார். இதேவேளை, மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் சுமார் 14,000 குடும்பங்கள் வாழ்ந்து […]













