உலகம் செய்தி

இஸ்ரேலுக்கான தூதரை திரும்பப் பெற்ற பிரேசில்

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பிரேசில் அதிபர் இனாசியோ லுலா டா சில்வா தொடர்ந்து இஸ்ரேலை விமர்சனம் செய்து வந்தார்.

காசா மீதான தாக்குதலை ஹொலோகாஸ்ட் உடன் ஒப்பிட்டு விமர்சித்தார். இதனால் பொது கண்டனம் தெரிவிக்க பிரேசில் தூதருக்கு இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி நீதிமன்ற அறிக்கை அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் இஸ்ரேலுக்கான பிரேசில் பிரதமரை திரும்பப் பெறுவதாக பிரேசில் அதிபர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரேசில் அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. காசா மீதான மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு எதிராகவும், தற்போது வரை அதில் முன்னேற்றம் ஏதும் இல்லை என்பதால் பிரேசில் தூதரை திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி