இலங்கை

‘ஏஹிபஸ்ஸிகோ’ குழுவினர் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

  • April 29, 2026
  • 0 Comments

உலக மக்களுக்கு அமைதிச் செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்கும், பௌத்த மதத்தின் உரிமையை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்வதற்குமாக இலங்கையில் 07 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட “ஏஹிபஸ்ஸிகோ” அமைதி நடைபயணத்தை நிறைவு செய்துகொண்டு, வியட்நாம் தேரர் உள்ளிட்ட குழுவினர் இன்று (29) காலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். அமெரிக்காவில் வசிக்கும் வியட்நாம் தேரர் வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் உள்ளிட்ட பிக்குகள், ‘அலோகா’ நாய் மற்றும் ஏனையோர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகர் நோக்கிப் புறப்பட்டனர். அங்கிருந்து […]

இலங்கை

அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

  • April 29, 2026
  • 0 Comments

நடைமுறையிலுள்ள பொது அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்து இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அத்துடன், சுகாதாரம், மின்சாரம், நீர், பெற்றோலிய விநியோகம் உள்ளிட்ட 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசியல் இலங்கை செய்தி

தையிட்டி விவகாரத்தில் மக்களுக்கு அநீதி இழைக்கப்படாது!

  • April 29, 2026
  • 0 Comments

“NPP ஆட்சிக் காலத்தில் விகாரைத் தேவைகளுக்காக மக்களின் காணிகள் ஒருபோதும் சுவீகரிக்கப்படமாட்டாது” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியாகத் தெரிவித்தார். காணி அளவீட்டுப் பணிகளின் போது ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் அது தொடர்பாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், “நாம் ஏற்கனவே பலமுறை கூறியது போல, மக்களின் காணிகளை அவர்களிடமே மீள ஒப்படைப்பதில் அரசு உறுதியாக உள்ளது. தையிட்டி […]

உலகம்

தொடர் பதற்றம் : OPEC கூட்டமைப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்!

  • April 29, 2026
  • 0 Comments

OPEC நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த விலகல் மே 1 முதல் நடைமுறைக்கு வரும். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி அமைச்சர் சுஹைல் முகமது அல்-மஸ்ரூயி ( Suhail Mohamed al-Mazrouei), பிராந்திய வல்லரசின் எரிசக்தி உத்திகளைக் கவனமாக ஆய்வு செய்த பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். அமெரிக்க-ஈரான் போருக்கு மத்தியில், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் குழுக்களுக்கும் அவற்றின் நடைமுறைத் […]

விளையாட்டு

பஞ்சாப் அணியை பந்தாடியது ராஜஸ்தான்!

  • April 29, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 40 ஆவது லீக் ஆட்டத்தில் Rajasthan Royals அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Punjab Kings அணிக்கு பிரப்சிம்ரன் சிங் (59) மற்றும் பிரியான்ஷ் ஆர்யா (29) ஜோடி அதிரடியான தொடக்கத்தை வழங்கியது. பின்னர் வந்த அணித் தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் 30 ஓட்டங்கள் எடுக்க, ஆட்டத்தின் போக்கை மாற்றிய மார்கஸ் ஸ்டோய்னிஸ், வெறும் 22 பந்துகளில் 62 ஓட்டங்கள் (4 பவுண்டரிகள், 6 […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

ஸ்டாமருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த எம்.பிகள் : பிரதமர் பதவி பறிபோக வாய்ப்பு!

  • April 29, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டாமர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தினாரா என்பது தொடர்பில் விசாரணையை தொடங்குவதற்கு ஏதுவாக  15 தொழிற்கட்சி எம்.பிகள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். லார்ட் மாண்டல்சன்  (Lord Mandelson) அமெரிக்காவிற்கான தூதராக நியமிக்கப்பட்டது தொடர்பாக கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள  நிலையில் இந்த வாக்களிப்பு வந்துள்ளது. 223க்கு 335 என்ற வாக்கு வித்தியாசத்தில் வாக்களிக்கப்பட்ட  அதேநேரம் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சுமார் 50 பேர் வாக்களிப்பை புறக்கணித்திருந்தனர். இரு எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற […]

அறிவியல் & தொழில்நுட்பம்

விமான நிலையத்தில் பணியாளர்களின் பற்றாக்குறையை ஈடு செய்யும் ரோபோக்கள்!

  • April 29, 2026
  • 0 Comments

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் (Tokyo’s Haneda airport) தரைவழிப் பணிகளுக்காக மனித உருவ ரோபோக்களை பயன்படுத்தவுள்ளதாக  ஜப்பான் ஏர்லைன்ஸ் (JAL) அறிவித்துள்ளது. ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் நோக்கில், இரண்டு வருட சோதனை முயற்சியாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டம் வரும் மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோக்கள் சரக்குக் கொள்கலன்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்வரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் வேலை செய்யும் வயதுடைய மக்களின் எண்ணிக்கை குறைந்து […]

இலங்கை

நீதிமன்றத்தில் முன்னிலையாகும் அர்ச்சுனா எம்.பி!

  • April 29, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். யாழில் காணி உரிமை தொடர்பாக பெண் ஒருவரை துப்பாக்கியை காட்டிய மிரட்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர்,  மல்லகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,  இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்புடைய செய்தி  நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்      

உலகம்

கடவுச்சீட்டுகளில் ட்ரம்பின் உருவப்படத்தை பதிக்க ஏற்பாடு!

  • April 29, 2026
  • 0 Comments

அமெரிக்க கடவுச்சீட்டுகளில் ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்பின் உருவப்படத்தைச் சேர்க்க அமெரிக்க வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க சுதந்திரத்தினத்தின்  250வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்படவுள்ள வரையறுக்கப்பட்ட கடவுச்சீட்டுகளிலேயே ட்ரம்பின் உருவப்படம் பொறிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு ஜனநாயக நாட்டில்  தற்போதைய தலைவரின் உருவப்படம் கடவுச்சீட்டில் அச்சிடப்படுவது அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. மேலும் இது ஒரு வரலாற்று நிகழ்வாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரம் கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் இந்த சிறப்புப் பதிப்பை நிராகரிக்க முடியுமா […]

இலங்கை

ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு விசாரணைக்கு!

  • April 29, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. ரணில் விக்ரமசிங்க, தான் பதவியில் இருந்தபோது, தனது மனைவி  மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்ல அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுளு்ளது. இந்த வழக்கு தொடர்பாக, ஏப்ரல் 24 அன்று, […]