ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு விசாரணைக்கு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
ரணில் விக்ரமசிங்க, தான் பதவியில் இருந்தபோது, தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்ல அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுளு்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, ஏப்ரல் 24 அன்று, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றிருந்தனர்.
வாக்குமூலம் பதிவு செய்வதற்காகத் தனது இல்லத்திற்கு வருமாறு மைத்ரி விக்ரமசிங்க எழுத்துப்பூர்வமாக விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவரது இல்லத்திற்கு இவ்வாறு சென்று வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





