இந்தியாவின் உ.பியில் திருவிழாவில் வழிபாட்டு மேடை சரிந்து 7 பேர் உயிரிழப்பு
உத்தரப் பிரதேச மாநிலத்தின் படக்ட் மாவட்டத்தில் சமண மத வழிபாட்டுத் தளத்தில் ஆண்டுதோறும் நிகழும் லட்டுத் திருவிழா நடைபெறுகிறது. அந்த விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு கடவுளுக்கு லட்டுகளைப் படைத்து வழிபடுவர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்த விழாவில், தற்காலிக வழிபாட்டு மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் நூற்றுக்கு மேற்பட்டோர் ஏறி நின்று வழிபாடு செய்ய முந்தியடித்துக் கொண்டு சென்றனர். அப்போது, அந்த மேடை சரிந்து விழுந்தது. அந்தச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 40 பேர் […]













