கேபிடல் கலவரம் தொடர்பாக டிரம்ப்பின் கணக்குகள் முடக்கம்; சமரசத் தொகையாக 33.7 மில்லியன் வழங்கும் மெட்டா
2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்றுகொள்ள முடியாத டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதற்கு அவர் பேச்சுகளும் பதிவுகளுமே காரணம் எனக் கருதிய சமூக ஊடகத் தளங்களான ‘ஃபேஸ்புக்’, முன்பு ‘ட்விட்டர்’ என அழைக்கப்பட்ட ‘எக்ஸ்’ ஆகியவை டிரம்ப்பின் கணக்குகளைத் தற்காலிகமாக முடக்கின. இதை எதிர்த்து 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம், டிரம்ப் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கைச் சுமுகமாகத் தீர்க்க முடிவுசெய்த ஃபேஸ்புக் உரிமையாளரான ‘மெட்டா’ நிறுவனம் […]













