இலங்கையில் காலநிலையில் மாற்றம் – குறைவடையும் மழை
தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனினும் மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், இரத்தினபுரி, காலி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் […]













