ஆசியா

சீனாவில் விமானத்தின் இருக்கையில் கண்டுப்பிடிக்கப்பட்ட பட்டாசு : விசாரணைகள் ஆரம்பம்!

  • February 8, 2025
  • 0 Comments

சீனாவில் விமானத்தின் இருக்கைக்கு அடியில் பட்டாசு இருப்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சீனாவின் குய்லினில் இருந்து சியாமெனுக்குச் செல்லும் ஷான்டாங் ஏர்லைன்ஸ் விமானம் SC2270 இல் பட்டாசு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் பயணி பட்டாசைக் கண்டுபிடித்து, அதை ஒரு விமானப் பணிப்பெண்ணிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. தான் கண்டெடுத்த பட்டாசைக் காட்டும் இந்தக் காட்சிகளை அவர் ஆன்லைனில் பகிர்ந்து கொண்டார். அத்துடன் அவர் ஷான்டாங் ஏர்லைன்ஸின் வாடிக்கையாளர் சேவை புகார் ஹாட்லைனையும் அழைத்ததாகவும், தற்போது […]

உலகம்

எல் சால்வடார் சிறைச்சாலையில் மறுபக்கம் : சொல்லெனா துயரங்களை அனுபவிக்கும் கைதிகள்!

  • February 8, 2025
  • 0 Comments

டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் வன்முறை குற்றவாளிகளை அனுப்பவுள்ள எல் சால்வடார் சிறைசாலை பற்றிய   கொடூரமான யதார்த்தங்களை கூறும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மத்திய அமெரிக்க நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் டஜன் கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடுப்பு மையத்தில் (CECOT) அடைக்கப்பட்டவர்களுக்கு 60 முதல் 1,000 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன, இது அங்குள்ள புதிய சிறைச்சாலையாகும். 40,000 பேர் தங்கக்கூடிய உலகின் மிகப்பெரிய சிறைகளில் ஒன்றான CECOT இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இது இப்போது […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை : யாழ்ப்பாணத்தில் புதிய அலுவலகத்தை நிறுவ குடிவரவு, குடியகல்வு துறை திட்டம்!

  • February 8, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் ஒரு புதிய அலுவலகத்தை நிறுவுவதற்கான திட்டங்களை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அறிவித்துள்ளதுடன், தினசரி வழங்கப்படும் பாஸ்போர்ட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது. வடக்கு மாகாணத்தில் வசிப்பவர்களுக்கு சேவை அணுகலை மேம்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இதன்படி,  முன்மொழியப்பட்ட யாழ்ப்பாணக் கிளைக்கு புதிய ஊழியர்களை நியமிக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்றும், ஆட்சேர்ப்பு திட்டம் ஏற்கனவே அரசு சேவைகள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது […]

வட அமெரிக்கா

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் காணாமல் போன விமானத்தின் சிதைவுகள் மீட்பு!

  • February 8, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் காணாமல் போன பயணிகள் விமானத்தின் சிதைவுகளை மீட்புக் குழுக்கள் தற்போது கண்டுபிடித்துள்ளன. அலாஸ்காவின் நோம் நகரிலிருந்து சுமார் 34 மைல் தொலைவில் உள்ள பனி மலைகளில் 10 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் காணாமல் போனதாக வெளிநாட்டு ஊடகங்கள் நேற்று (7) செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, விமானி உட்பட விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களில் மூன்று பேரின் உடல்கள் தற்போது மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளன. விமானத்தைத் […]

பொழுதுபோக்கு

டேட்டிங் ஆப் குறித்து தகவலை பகிர்ந்தார் நடிகை பார்வதி

  • February 8, 2025
  • 0 Comments

  பார்வதி திருவோத்து பூ , மரியான், உத்தமவில்லன், பெங்களூர் டேஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி திருவோத்து. இவர் மலையாள சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். பார்வதி அவ்வப்போது பேட்டிகளில் ஓப்பனாக பேசும் பல விஷயங்கள் பெரிய சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை பார்வதி அவருக்கு காதலில் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் டேட்டிங் ஆப் பயன்படுத்துவது குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ” நான் […]

வட அமெரிக்கா

ட்ரம்பின் மற்றுமொரு முடிவுக்குத் தடை விதித்த நீதிமன்றம்!

  • February 8, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மற்றுமொரு திட்டத்தை அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தற்காலிகமாக தடுத்துள்ளது. யு.எஸ்.எய்ட் என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் 2,200 பணியாளர்களை கட்டாய விடுமுறையில் அனுப்பும் திட்டமே தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது. இரண்டு தொழிற்சங்கங்கள் முன்வைத்த மனுவொன்றுக்கு அமைய இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிகவும் வரையறுக்கப்பட்ட வகையில் இந்த தற்காலிக தடையுத்தரவை பிறப்பிப்பதாக நீதிபதி கார்ல் நிக்கோல்ஸ் […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!

  • February 8, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.66 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.30 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

வாழ்வியல்

சோர்வு அதிகமாக இருக்கிறதா…? காரணங்களும்… தீர்வுகளும்

  • February 8, 2025
  • 0 Comments

தவறான வாழ்க்கை முறை, மற்றும் உணவு பழக்கங்களால் பல பிரச்சனைகள் ஏற்படலாம். மோசமான வாழ்க்கை முறை காரணமாக எப்போதும் சோர்வாகவும் எரிச்சல் உணர்வுடனும் இருப்பவர்கள் அதிகம். அதிக உடல் உழைப்புக்குப் பிறகு சோர்வாகவும் மந்தமாகவும் உணருவது இயல்பு தான். ஆனால் நீங்கள் எந்த காரணமும் இல்லாமல் சோர்வாக உணர்ந்தால், அதனை அலட்சியப்படுத்தக் கூடாது. காரணம் ஏதும் இன்றி சோர்வாக இருப்பதற்கான காரணங்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம். தூக்கமின்மை நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க போதுமான, ஆழ்ந்த தூக்கம் […]

செய்தி

மேலும் 487 இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா! தயாரான பட்டியல்

  • February 8, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக 15 லட்சம் வெளிநாட்டினர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த 18,000 பேர் உள்ளனர். இதில் முதல் கட்டமாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு ராணுவ விமானத்தில், கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் திருப்பி அனுப்பியது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது. விமானத்தில் வந்த 205 […]

அறிந்திருக்க வேண்டியவை

YR4 விண்கல் பூமியைத் தாக்கும் அபாயம் – நிபுணர்கள் எச்சரிக்கை

  • February 8, 2025
  • 0 Comments

எதிர்வரும் 2032-ஆம் ஆண்டில் YR4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. இதன் ஆபத்து 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். அந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 1.3 சதவீதம்தான், அதாவது ஏறத்தாழ 99 சதவீதம் அது ஆபத்தில்லாமல் பூமியைக் கடந்துவிடும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த வாரம் கூறியிருந்தது. இருந்தாலும் அதன் நகா்வைத் தொடா்ந்து கண்காணித்து வரும் ஆய்வாளா்கள் ஒய்ஆா்4 விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு […]