இலங்கை

இலங்கையில் தாயை அடித்துக் கொலை செய்த மகன்

  • April 7, 2025
  • 0 Comments

வாழச்சேனை பொலிஸ் பிரிவின் நவலடி பகுதியில் மகன் தனது தாயை துடைப்பத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்தக் குற்றம் நேற்று (06) காலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தாய்க்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து மகன் இந்தக் கொலையைச் செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 72 வயது என்று தெரிவிக்கப்பட்டது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 42 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை மருத்துவமனை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பம் பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய தகவல்

  • April 7, 2025
  • 0 Comments

AI என்ற ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்சில் Google Gemini, ChatGPT, Deepseek V3 ஆகியவற்றுக்கான சில முக்கிய அப்டேட்களை பாக்கலாம். Google Gemini. AI தொழில்நுட்பத்தில் ரீசனிங் மூலம் சிறந்த பதில்களை வழங்குவதற்கான ரேசில் லேட்டாகத்தான் இணைந்தது கூகுள் ஜெமினி. அதை லேட்டஸ்ட்டாக மாற்ற வேண்டும் என்பதற்காக Google Gemini 2 பாய்ன்ட் O Flash thinking-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் பயனர் கேட்கும் கேள்விகளுக்கு யோசித்து, தரவுப் பட்டியல்களோடு Insight-களை தருமாம். அதுமட்டுமின்றி 15 லட்சம் வார்த்தைகளைக் கூட […]

விளையாட்டு

ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

  • April 7, 2025
  • 0 Comments

கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது வயது அதிகரித்து வருவதால், இந்த சீசனுக்குப் பிறகு எம்எஸ் தோனி ஓய்வு பெறுவாரா? என்று கேள்வி தொடர்ந்து எழுகிறது. இதனிடையே, நேற்றைய தினம் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக எம்.எஸ். தோனியின் பெற்றோர் சென்னை வந்தடைந்ததால், இது தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம் என்று ஒவ்வொரு ரசிகரும் அஞ்சத் தொடங்கினர். இது நடக்கவில்லை என்றாலும், தோனி இது […]

இலங்கை

இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை – பல பகுதிகளுக்கு உச்சம் கொடுக்கும் சூரியன்

  • April 7, 2025
  • 0 Comments

இலங்கையின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய […]

ஆஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் வீட்டில் இருந்து விமானத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திய நபர்

  • April 7, 2025
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் அதிக சக்திவாய்ந்த டோர்ச் லைட்டை விமானத்தை நோக்கி ஒளிரச் செய்த ஒருவரை மத்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். அடிலெய்டில் வசிக்கும் 58 வயதான இந்த நபர், தனது வீட்டிலிருந்து விமானத்தை நோக்கி டோர்ச் லைட்டை ஒளிரச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. விமானி அவரது முகவரியை பொலிஸாருக்கு தெரிவித்ததை அடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார். விமானத்தில் யாரோ வேண்டுமென்றே பிரகாசமான ஒளியைப் பிரகாசிப்பதாகக் கூறிய விமானி, விமானத்தை ஓட்டுவது கடினமாக உள்ளதென குறிப்பிட்டுள்ளார். அத்தகைய குற்றத்திற்கு 15 […]

ஆசியா செய்தி

சீனாவில் காலுறைகளை நுகர்ந்த நபருக்கு நேர்ந்த கதி – அதிர்ச்சியில் மருத்துவர்கள்

  • April 7, 2025
  • 0 Comments

சீனாவின் சொங்சிங் மாநிலத்தில் காலுறைகளை நுகர்ந்த நபருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அலுவலக ஊழியரான அவர் அண்மையில் ஓயாத இருமல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெறச் சென்றார். அவரின் இருமல் மிக மோசமாக இருந்ததால் இரவில் சரியான தூக்கமின்றிக் கண்கள் சிவந்துள்ளது. பரிசோதனையின்போது அவருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதை மருத்துவர் உறுதிசெய்தார். அதைப் பற்றி உரையாடியபோது தனக்கு காலுறைகளை நுகரும் பழக்கம் இருப்பதை மருத்துவர் அறிந்தார். மருத்துவர் உடனடியாக குறித்த நபரின் காலுறைகளைச் […]

உலகம்

அமெரிக்காவிற்கு கார்களை அனுப்புவதை நிறுத்திய ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் நிறுவனம்

  • April 7, 2025
  • 0 Comments

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சொகுசு கார் உற்பத்தியாளரான ஜாகுவார் லேண்ட் ரோவர், அதன் வாகனங்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டுத் தயாரிப்பு கார்களுக்கு அதிக வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கான தனது கார்களின் ஏற்றுமதியை நிறுத்தியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவரின் ஆண்டு உற்பத்தியில் கால் பகுதி அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடுமையான வரிகளுக்கு நீண்டகால தீர்வுகள் உருவாக்கப்படும் வரை, குறுகிய கால நடவடிக்கையாக ஏற்றுமதியை நிறுத்தி வைப்பதாக நிறுவனம் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

பாராளுமன்ற உறுப்பினர் காலமானார்

  • April 6, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன ஜயவீர இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். மாரடைப்பு காரணமாக மறைந்த இவர் 38 வயதான தல்தூவ பகுதியை சேர்ந்தவராவார் ஆவார்.

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

அதி உச்ச எச்சரிக்கையில் தெஹ்ரான்

  • April 6, 2025
  • 0 Comments

ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி நாட்டின் ஆயுதப் படைகளை ‘உயர் எச்சரிக்கை’ நிலையில் நிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். ஈரானின் பாதுகாப்பு தரப்பின் குரல் தரவல்ல அதிகாரியின் தகவலை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. தெஹ்ரானுடனான அதன் அணுசக்தி திட்டம் குறித்த இராஜதந்திர முயற்சி தோல்வியடைந்தால் ஈரான் மீது யுத்தம் தொடுப்பதாக அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது சாகோஸ் தீவுகளில் பல குண்டுவீச்சு விமானங்களை குவித்துள்ள டிரம்ப் ஏற்கனவே மத்திய கிழக்குக்கு இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களையும் […]

இலங்கை செய்தி

யாழ் பல்கலை சிரேஷ்ட மாணவர்கள் இருவருக்கு விளக்கமறியல்

  • April 6, 2025
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 27ஆம் திகதி பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர், அவரை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி, தனியார் மாணவ விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அம்மாணவனையும் வேறு […]