இலங்கை: புத்தாண்டு எண்ணெய் அபிஷேக விழாவில் பிரதமர் ஹரிணி பங்கேற்பு
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டிற்கான எண்ணெய் அபிஷேக விழா இன்று (ஏப்ரல் 16) கொலன்னாவையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராஜமகா விஹாரையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நடைபெற்றது. பிரித் ஓதப்பட்டதைத் தொடர்ந்து, காலை 9:04 மணிக்கு சுப நேரத்தில் எண்ணெய் அபிஷேக சடங்கு, கோயிலின் பிரதம விகாராதிபதி வணக்கத்திற்குரிய கொலன்னாவ தம்மிக்க தேரர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர், இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, கொலன்னாவ பிரதேச செயலாளர் பிரியநாத் […]













