ஏமனில் பல மில்லியன் டொலர் மதிப்பிலான ஆளில்லா வானூர்திகளை தொலைத்த அமெரிக்கா
ஏமனில் அமெரிக்கா பல மில்லியன் டொலர் மதிப்பிலான MQ-9 Reaper ரக ஆளில்லா வானூர்திகளை தொலைத்துள்ளது. மார்ச் 15ஆம் திகயிலிருந்து 7 ஆளில்லா வானூர்திகள் காணாமல்போனதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார். அதே காலக்கட்டத்தின்போது தான் அமெரிக்கா ஏமனில் ஆகாயத் தாக்குதல்களைத் தொடங்கியது. ஒரு MQ-9 இன் விலை சுமார் 30 மில்லியன் டொலர்களாகும். அவை எப்படித் தொலைந்தன என்பதை அதிகாரி தெரிவிக்கவில்லை. MQ-9 ஆளில்லா வானூர்திகள், கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களை அடையாளம் கண்டு தாக்க உதவுகின்றன. […]













