இந்தியா செய்தி

இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்பிரமணி பதவியேற்பு!

  • June 1, 2026
  • 0 Comments

இந்தியாவின் 3ஆவது முப்படை தலைமை தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்றுள்ளார். முப்படை தலைமை தளபதியாக பதவி வகித்த ஜெனரல் அனில் சவுகானின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்நிலையிலேயே புதியவர் பதவியேற்றுள்ளார். ஜெனரல் ராஜா சுப்பிரமணி , தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சியை முடித்து கடந்த 1985-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் அதிகாரியாக சேர்ந்தார். ராணுவத் துணை தளபதியாக பணியாற்றிய இவர் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

இலங்கை தமிழ்ப் பெண் கார் ஏற்றிக் கொலை: சென்னையில் பயங்கரம்!

  • June 1, 2026
  • 0 Comments

சென்னை, கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், இலங்கை தமிழ் பெண்ணொருவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சென்னை கோயம்பேட்டில் பிரபல நட்சத்திர ஹோட்டலொன்று உள்ளது. அதன் உள்புறம் உள்ள மது பாரில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இரு தரப்பினர் மது அருந்தினர். அப்போது, அவர்களுக்குள் நடனமாடுவதில் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். […]

இந்தியா செய்தி

இந்தியாவிடமிருந்து ஏவுகணை வாங்கும் இந்தோனேசியா!

  • June 1, 2026
  • 0 Comments

இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை இந்தோனேசியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய மத்திய பாதுகாப்புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற ‘ஷாங்ரி-லா பாதுகாப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். ‘‘வியட்நாம் நாட்டுடனான பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. இதேபோல், இந்தோனேசியா நாட்டுடனான பேச்சுவார்த்தையும் சுமுகமாக முடிவடையும் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் : ரயில் நிலையங்களே குறி!

  • June 1, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் ரயில் நிலையங்களில் வன்முறைகள் அதிகரித்துள்ளதால் ஊழியர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பாக உணரவில்லை எனத் தெரிவித்துள்ளனர். மற்ற இடங்களை விட  ரயில் நிலையத்தில் அதிகளவிலான வன்முறை நிகழ்வதாக குற்றவியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஃபிராங்க்பர்ட் (Frankfurt) ரயில் நிலையத்தில் பிக்பாக்கெட் திருடர்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் பயணிகள், அதன் அண்டைப்பகுதிகளில் போதைப் பொருள் பாவனையாளர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொதுவாக காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருப்பார்கள், ஆனால் […]

ஆஸ்திரேலியா செய்தி

40 கிலோ கொக்கைன் கடத்தல்: ஆஸ்திரேலியாவில் சந்தேகத்திற்கிடமான லாரி எரிப்பு!

  • June 1, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, வடக்கு குயின்ஸ்லாந்தின் ஒதுக்குப்புறமான படகுத் துறைமுகத்திற்கு அருகே சுமார் 6 மில்லியன் டாலர் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்ட கொக்கைன் போதைப்பொருள் பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. Mackay வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Midge Point , Jimmys Rock படகுத் துறைமுகத்தில் சனிக்கிழமை காலை 8 மணியளவில் 40 கிலோகிராம் எடையுள்ளகொக்கைன் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போதைப்பொருள் பொதிகள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கலாம் எனப் பொலிஸார் கருதுகின்றனர். முன்னதாக, அங்கு லாரி ஒன்று தீப்பற்றி எரிவதாகத் தகவல் கிடைத்து […]

இலங்கை செய்தி

யாழில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் படுகாயம்!

  • June 1, 2026
  • 0 Comments

யாழில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிளொன்று, வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கள்மீது மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கட்டளையைமீறி நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) பயணித்த மோட்டார் சைக்கிளை, பொலிஸார் துரத்தி வந்தனர். இதன்போது யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடியில், பொலிஸார் துரத்தி வந்த மேற்படி மோட்டார் சைக்கிளானது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதன்போது அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் […]

இலங்கை

மாகாண சபைத் தேர்தல் – நிதி ஒதுக்கீடு தொடர்பில் எழுந்துள்ள குழப்பம்!!

  • June 1, 2026
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதிகள், வேறு எந்த நோக்கங்களுக்காகவும் அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்தப்பட்டதா என்பதை விசாரிக்க வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் எழுதிய கடிதத்தில்,   மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதிகள், அரசாங்கத்தால் பேரிடர் மறுசீரமைப்பு மற்றும் அது தொடர்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று சில்வா  கூறியுள்ளார். எனக்குத் தெரிந்தவரை, மாகாண சபைத் தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு எந்தச் செலவினத் தலைப்பிற்கோ அல்லது […]

உலகம் செய்தி

நெருக்கடியான சூழ்நிலையில் ஈரான் ஜனாதிபதி பதவி விலகியதாக தகவல்!

  • June 1, 2026
  • 0 Comments

ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் (Masoud Pezeshkian) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் தனது இராஜினாமா கடிதத்தை உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின்  ( Mojtaba Khamenei) அலுவலகத்தில் சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் வெளியாகியுள்ள கடிதமொன்றில், தற்போதைய சூழ்நிலையில் தன்னால் திறம்பட ஆட்சி செய்யவோ அல்லது தனது அரசியலமைப்பு பொறுப்புகளை நிறைவேற்றவோ முடியவில்லை என்றும், எனவே பதவி விலக அனுமதி கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் சம்பந்தப்பட்ட சமீபத்திய மோதலைக் கையாண்ட விதம் […]

உலகம் செய்தி

மீண்டும் பதற்றம்: அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி!

  • June 1, 2026
  • 0 Comments

தெற்கு ஈரானில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக விமானப்படை தளமொன்று இலக்குவைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது. ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள சிரிக் தீவில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்திய ஒரு மணி நேரத்திற்குள் இந்த எதிர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க தளத்தின் மீது ஈரானிய போர் விமானங்கள் குண்டுவீசி அங்கிருந்த இலக்குகளை அழித்துள்ளன. இந்த மோதல்களின் பின்னணியில், அண்டை நாடான […]

உலகம்

மியான்மாரில் கிளர்ச்சி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் வெடி விபத்து! பலர் பலி!

  • June 1, 2026
  • 0 Comments

மியான்மாரில் கிளர்ச்சி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காங் டாட் ( Kong Tat) கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுரங்கப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தற்செயலாக வெடித்ததே இதற்குக் காரணம் என கிளர்ச்சிப் படையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை. இருப்பினும் 25 பெண்கள் மற்றும் 30 ஆண்கள் உட்பட குறைந்தது 55 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளன. “வெடி விபத்தின் விளைவாக உயிரிழந்தவர்கள், […]