இலங்கை செய்தி

யாழில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் படுகாயம்!

யாழில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிளொன்று, வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கள்மீது மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கட்டளையைமீறி நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) பயணித்த மோட்டார் சைக்கிளை, பொலிஸார் துரத்தி வந்தனர்.

இதன்போது யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடியில், பொலிஸார் துரத்தி வந்த மேற்படி மோட்டார் சைக்கிளானது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதன்போது அந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பொலிஸாரால் துரத்திவரப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!