ஐரோப்பா செய்தி

‘அணுசக்தி ஒப்பந்த பேச்சு’ – தொழில்நுட்ப ஆலோசனை வழங்க பிரான்ஸ் தயார்!

  • June 1, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தத்தை எட்ட ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டவுடன், ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கான சர்வதேசப் பணியில் பிரான்ஸ் தீவிரமாகப் பங்கேற்கும் என்று அவர் உறுதியளித்தார். குறிப்பாக, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும் பிரான்ஸ் தயாராக உள்ளது அவர் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் […]

உலகம்

தென்கொரியாவில் எரிபொருள் உற்பத்தி ஆலையில் விபத்து – ஐவர் பலி!

  • June 1, 2026
  • 0 Comments

தென்கொரியாவின் ரொக்கெட் எரிபொருள் உற்பத்தி ஆலையில், இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர். டேஜியோன் நகரில் உள்ள ஹன்வா ஏரோஸ்பேஸ் (Hanwha Aerospace) நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதால், அவர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வெடி விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் […]

உலகம்

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடை!!

  • June 1, 2026
  • 0 Comments

மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இன்று இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிகளின்படி, மெட்டாவின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், டிக்டாக், மற்றும் கூகுளின் யூடியூப் உள்ளிட்ட தளங்கள், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள ஆவணங்களுடன் பயனரின் வயதைச் சரிபார்க்க வேண்டும். இதற்குக் கட்டுப்படத் தவறும் நிறுவனங்கள் 10 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் செலுத்த நேரிடும், இது தோராயமாக […]

இலங்கை செய்தி

வழக்கு பதிவு ஏட்டை திருடியவருக்கு மறியல்: உடந்தையாக இருந்த பெண்ணுக்கு பயணத் தடை!

  • June 1, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு ஏட்டினை திருடிய சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு , திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம். எஸ். எம். சம்சுதீன் முன்னிலையில் இன்று (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபருக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலம் தொடர்பிலான வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்று […]

ஆஸ்திரேலியா செய்தி

உலகை மிரட்டும் Ebola வைரஸ்: ஆஸ்திரேலியாவில் பயணக் கட்டுப்பாடு?  

  • June 1, 2026
  • 0 Comments

இத்தாலி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையிலும், எபோலா பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா பயணக் கட்டுப்பாடுகளையோ அல்லது தனிமைப்படுத்தல் (Quarantine) விதிகளையோ விதிக்காது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ” சர்வதேச அளவில் எபோலா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வந்தாலும், இந்த கட்டத்தில் ஆஸ்திரேலியா பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிடவில்லை.” – என்று ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் Mark Butler தெரிவித்தார். […]

உலகம்

போரில் திருப்புமுனை : முக்கிய கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல்!! ஹிஸ்புல்லாவிற்கு ஏமாற்றம்!

  • June 1, 2026
  • 0 Comments

லெபனானில் அமைந்துள்ள 900 ஆண்டுகள் பழமையான பியூபோர்ட் (Beaufort) கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றி உள்ளது. தரைவழி தாக்குதல் மூலம் பியூபோர்ட் கோட்டையையும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட பியூபோர்ட் கோட்டையின் மீது இஸ்ரேல் இராணுவத்தினர் தங்களது நாட்டு தேசியக்கொடியை ஏற்றியுள்ளனர். பியூபோர்ட் கோட்டையை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியிருப்பது, ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் ஒரு வியத்தகு திருப்புமுனை என்று பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு  தெரிவித்துள்ளார். இப்பகுதியில் இஸ்ரேல் […]

உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தத்தை நாடும் ஈரான்: ட்ரம்ப் தகவல்!

  • June 1, 2026
  • 0 Comments

அமைதி ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு ஈரான் உண்மையாகவே விரும்புகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். “ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள உண்மையில் விரும்புகிறது. அது அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுடன் துணை நிற்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஓர் ஒப்பந்தமாக இருக்கும். ஆனால் இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட விரும்புபவர்கள், நான் இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும், இன்னும் மெதுவாகச் செயல்பட வேண்டும், […]

உலகம் செய்தி

மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம்!

  • June 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இதனால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த தங்களின் அதிநவீன MQ-1 Predator ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள ராணுவ ரேடார் மற்றும் ட்ரோன் கட்டுப்பாட்டு மையங்கள் மீது அமெரிக்கப் படைகள் அதிரடி குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அண்டை நாடான குவைத் மீது ஒரே நேரத்தில் பல […]

ஐரோப்பா

Ukவில் எலக்ட்ரோகீமோதெரபி சிகிச்சையை பெற்ற முதல் பெண்மணி!

  • June 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கல்லீரல் கட்டியை குணப்படுத்துவதற்கான அறுவை சிகிச்சையில் முதல் முறையாக ரோபோ வழிகாட்டும் எலக்ட்ரோகீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. வடக்கு யார்க்ஷயரில் உள்ள ஹாரோகேட்டைச் சேர்ந்த 92 வயதான பிரெண்டா ஐவ்சன் (Brenda Iveson) என்ற பெண்மணிக்கே இந்த சிகிச்சை முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. கட்டியின் இருப்பிடம் மற்றும் அவரது உடல் பலவீனம் காரணமாக ஆரம்பத்தில் வழங்கப்படும் அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி உள்ளிட்ட வழக்கமான சிகிச்சைகள் அவருக்கு பலனளிக்காமல்போனதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்தே அவருக்கு […]

இந்தியா செய்தி

இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்பிரமணி பதவியேற்பு!

  • June 1, 2026
  • 0 Comments

இந்தியாவின் 3ஆவது முப்படை தலைமை தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்றுள்ளார். முப்படை தலைமை தளபதியாக பதவி வகித்த ஜெனரல் அனில் சவுகானின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்நிலையிலேயே புதியவர் பதவியேற்றுள்ளார். ஜெனரல் ராஜா சுப்பிரமணி , தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சியை முடித்து கடந்த 1985-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் அதிகாரியாக சேர்ந்தார். ராணுவத் துணை தளபதியாக பணியாற்றிய இவர் […]