குறைந்த நிதி ஒதுக்கீடு!! கடந்தகால படிப்பினைகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!
எபோலா தொற்றை கட்டுப்படுத்த கடந்தகாலத்தோடு ஒப்பிடுகையில் பிரித்தானியா இம்முறை குறைந்த அளவிலான நிதியை ஒதுக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. 2014-15-ல் £427 மில்லியன் வழங்கிய நிலையில், தற்போது வெறும் 21 மில்லியன் மட்டுமே வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதிகரித்து வரும் பாதுகாப்பு செலவீனங்களை கருத்தில் கொண்டு குறைந்த அளவிலான நிதி ஒதுக்கப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், உலகளாவிய சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான பெக்கி கூப்பர் (Beccy Cooper), 2014/15 […]













