உலகம்

மியான்மாரில் கிளர்ச்சி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் வெடி விபத்து! பலர் பலி!

மியான்மாரில் கிளர்ச்சி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காங் டாட் ( Kong Tat) கிராமத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுரங்கப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தற்செயலாக வெடித்ததே இதற்குக் காரணம் என கிளர்ச்சிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை. இருப்பினும் 25 பெண்கள் மற்றும் 30 ஆண்கள் உட்பட குறைந்தது 55 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளன.

“வெடி விபத்தின் விளைவாக உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் சேதமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு பலௌங் மாநில விடுதலை முன்னணி ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!