கிழக்கு காங்கோவில் வேகமாக பரவும் எபோலா – 1700இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
கிழக்கு காங்கோவில் மிக வேகமாகப் பரவிவரும் எபோலா நோய்த் தொற்றால் 1,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி 3,802 பேருக்கு நோய் இருப்பதும், 1,707 பேர் உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கா நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் (CDC) தலைமை இயக்குநர், இந்த நோய்த் தொற்று எப்போது உச்சத்தை அடையும் என்பது குறித்து நிச்சயமற்ற தன்மையை வெளிப்படுத்தினார்.
மேலும், தற்போது ஏற்படும் புதிய தொற்றுகளில் 80 சதவீதம் சமூகப் பரவலால் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இல்லாத நிலையில் மக்கள் மிகுந்த அச்சத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சுகாதாரப் பணியாளர்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை எனவும், சம்பளத்தை வழங்குமாறு இறுதி எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.




