தென்னாப்பிரிக்காவில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பேருந்தை தேடும் அதிகாரிகள் – 08 உடல்கள் மீட்பு!
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவர்களைத் தேடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்தாதா நகரில் உள்ள பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த குழந்தைகள், பாலத்தைக் கடக்கும்போது அவர்களின் பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பேருந்து ஓட்டுநர் உட்பட மொத்தம் எட்டு உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக கிழக்கு கேப் சமூக பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். மூன்று மாணவர்கள் மீட்கப்பட்டதாக மற்ற அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் பேருந்தில் எத்தனை மாணவர்கள் இருந்தனர் என்பது தெளிவாகத் […]













