இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு முக்கிய செய்திகள்

ஈரானிடமிருந்து தொடர் தாக்குதல்கள் இடம்பெறலாம் – இஸ்ரேலியப் பிரதமர் எச்சரிக்கை

  • June 14, 2025
  • 0 Comments

ஈரான் மேலும் தொடர் தாக்குதல்களை நடத்தும் என்று எதிர்பார்ப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் இன்னமும் முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்துக்காக போராடுமாறு ஈரானிய மக்களை நெதன்யாகுகேட்டுக்கொண்டார். தெஹ்ரான் இதற்கு முன்னர் இவ்வளவு வலுவிழந்திருக்கவில்லை என நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் ராணுவத் தளபதிகளும் மூத்த அணுசக்தி அறிவியலாளர்களும் உயிரிழந்ததனை அவர் சுட்டினார்.

ஆசியா

சீனாவை ஆட்டிப்படைக்கும் சூறாவளி – பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட மக்கள்

  • June 14, 2025
  • 0 Comments

சீனாவின் தெற்குக் கரையை வூடிப்ச் சூறாவளி ஆட்டிப்படைத்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சுமார் 16,000 பேர் கட்டுமானத் தளங்களிலிருந்தும் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளது. பல விமான, ரயில் சேவைகள் இரத்துசெய்யப்பட்டுள்ளன. நேற்று இரவிலிருந்து அந்த வட்டாரத்தில் கடும் காற்று வீசுகிறது. கனமழை பொழிகிறது. கப்பல்களில் வேலை செய்யும் சுமார் 40ஆயிரம் பேர் கரை திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு சீனாவைத் தாக்கியுள்ள முதல் சூறாவளி இதுவாகும்.

மத்திய கிழக்கு

இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்

  • June 14, 2025
  • 0 Comments

இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 20 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது. சைரன் எச்சரிக்கைக்கு பின்னர் துணைமருத்துவ குழுவினர் ரொக்கட் தாக்குதல் இடம்பெற்ற பகுதிக்கு அனுப்பப்பட்டனர். பத்துபேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தலைநகரிலிருந்து ரிசோன் லெசியோன் என்ற பகுதியில் வீடுகளை ஏவுகணைகள் தாக்கின என மகென் டேவிட் அலெம் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம்

ஆண்ட்ராய்டு 16-ன் அப்டேட் சிறப்பு அம்சங்கள்!

  • June 14, 2025
  • 0 Comments

ஆண்ட்ராய்டு (Android) கூகுளின் மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமாகும் (Operating System). உலகெங்கிலும் கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு, மொபைல் ஃபோன்கள் பயன்படுத்தும் முறையை மிகவும் எளிமையாகவும் சீரானதாகவும் மாற்றி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கூகுள் புதிய ஆண்ட்ராய்டு அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், ஆண்ட்ராய்டு 16 என்ற புதிய ஆபரேட்டிங் சிஸ்டத்தை கூகுள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதிக பாதுகாப்பு அம்சங்கள், செயற்கை நுண்ணறிவு குறிப்பிடத்தக்க மாற்றங்களாக பார்க்கப்படுகின்றன. ஆண்ட்ராய்டு 16-ன் முக்கிய அம்சங்கள்: ஆண்ட்ராய்டு […]

உலகம்

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என ட்ரம்ப் எச்சரிக்கை

  • June 14, 2025
  • 0 Comments

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு சக்தி தளங்கள், ராணுவ முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் பதிலடி வழங்கியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த நாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தது. […]

இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

சிவப்புக் கோட்டை தாண்டிய ஈரான் – மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரிக்கை

  • June 14, 2025
  • 0 Comments

ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரானின் அரசுத் தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது, இஸ்ரேல் வெள்ளிக்கிழமை காலை மேற்கொண்ட தாக்குதலுக்கான ஈரானின் “தீவிர பதிலடி நடவடிக்கையின் தொடக்கம்” என விளக்கப்பட்டுள்ளது. “தற்போதிய நிமிடங்களில், பலவகையான நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களை நோக்கி ஏவப்பட்டுள்ளன. இது இஸ்ரேல் நடத்திய வன்கொடுமையான […]

ஐரோப்பா

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • June 14, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் குறில் தீவுகளில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கடலில் 12 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுவரை சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

ஐரோப்பா

ஜெர்மனி பூங்காவில் 57 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த யானை குட்டி

  • June 14, 2025
  • 0 Comments

ஜெர்மனியின் பூங்கா ஒன்றில் சுமார் 57 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு யானைக் குட்டி பிறந்தது. ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாகாணத்தில் உள்ள ஓப்பல் உயிரியல் பூங்காவில் இந்த யானைக்கு குட்டி பிறந்துள்ளது. காஜா என்ற பெயரிடப்பட்ட அந்தக் குட்டி, தனது இருப்பிடத்தை சுற்றிவந்து, பெற்றோருடன் விளையாடி மகிழ்ந்தது. குட்டிக்கு பாலூட்டுவதில் தாய் யானை சற்று சிரமப்பட்டாலும், அதன் 55 வயது அத்தை யானை மற்றும் பூங்கா ஊழியர்கள் இந்த சிக்கலைத் தீர்க்க உதவினர்.  

இலங்கை

இலங்கை காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

  • June 14, 2025
  • 0 Comments

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் […]

இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

இஸ்ரேல் – ஈரான் மோதல்! வான் முழுவதும் பாய்ந்த டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள்

  • June 14, 2025
  • 0 Comments

ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானிய பாதுகாப்பு அமைப்புகள், அணு உலை சார்ந்த நிர்வாக கட்டடங்கள் மீது இஸ்ரேலிய விமானப்படை வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 24 மணிநேரத்துக்குள்ளாக மீண்டும் நூற்றுக்கணக்கான டிரோன்களையும் இஸ்ரேல் ஏவியது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றிரவு இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை நோக்கி ஈரான் வான்வழித் தாக்குதல் […]