ஈரானின் இறையாண்மை,பாதுகாப்பை இஸ்ரேல் மீறுவதை சீனா கண்டிக்கிறது: ஐ.நா வுக்கான சீன தூதர்
ஈரானின் அரசுரிமையையும் எல்லைப் பாதுகாப்பையும் மீறியதை சீனா கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சீனாவுக்கான தூதர் ஃபூ கொங் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தீவிரமடைந்து வருவதையும் மோதல்கள் பெருகி வருவதையும் சீனா எதிர்ப்பதாக திரு ஃபூ, மத்திய கிழக்கு விவகாரம் குறித்து ஐநா பாதுகாப்பு மன்றம் வெள்ளிக்கிழமையன்று நடத்திய கூட்டத்தின்போது கூறினார். ஈரானுடனான அணுவாயுதப் பேச்சுவார்த்தைகளின் மீது இந்த அத்துமீறலும் வேறு சில அண்மைச் சம்பவங்களும் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்து சீனா கவலைப்படுவதாக […]













