மன அழுத்தத்தை குறைக்கும் மீன் வளர்ப்பு!
சமீபகாலமாக நிறைய வீடுகளில் சின்ன சின்ன வண்ண மீன்களை தொட்டியில் வைத்து வளர்ப்பது அதிகரித்து வருகிறது. இது செல்வ வளத்தை அதிகரிப்பதாக பலரும் நம்புகின்றனர். ஆனால், அறிவியல் ரீதியாக பார்க்கும்போது, வீட்டில் மீன் தொட்டியை வைத்து பராமரிப்பது, உடலுக்கும், உள்ளத்துக்கும் மகிழ்ச்சியைத் தருவதோடு, மன அழுத்தத்தை குறைத்து நம்மை சீரான மனநிலையில் வைத்துக் கொண்டு நமது செயல்திறனைக் கூட்ட உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மீன்கள் உயிரோட்டத்தையும் நேர்மறையையும் குறிக்கின்றன. எனவே, தொட்டியில் நீந்தும் மீன் நேர்மறை உணர்வலைகளை […]













