காசா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 85 பேர் பலி
காஸா வட்டாரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக உள்ளூர் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தோரில் அதிகமானவர்கள் காஸா நகரைச் சேர்ந்தவர்கள். நகரின் நடுப்பகுதியில் அமைந்துள்ள தராஜ் குடியிருப்புப் பேட்டையின் ஃபிராஸ் சந்தைக்கு அருகிலிருந்த கட்டடமொன்றும் முகாம்களும் தாக்கப்பட்டன. இடம் பெயர்ந்த குடும்பத்தினர் அவற்றில் வசித்துவந்தனர். அவர்களில் பெண்களும் சிறுவர்களும் உட்பட 20 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஹமாஸ் குழுவின் போராளிகள் இருவரைக் குறிவைத்ததாகச் சொன்னது இஸ்ரேலிய ராணுவம். உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்த தகவலில் முரண்படுவதாக அது […]













