இலங்கை செய்தி

இலங்கையில் மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு காண்பதில் நிலவும் சிக்கல்கள்!

  • October 6, 2025
  • 0 Comments

இலங்கையில் மருந்து பற்றாக்குறைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் தற்போதுள்ள சில சட்டங்கள் தடையாக இருப்பதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். அந்த சட்டங்களை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாற்றுவது சிக்கலாக தோன்றினாலும்,  இது தொடர்பான சில சட்டங்களும் விதிமுறைகளும் புதியவை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள விபாசி பௌத்த மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இந்த கருத்துக்களை முன்வைத்தார். […]

மத்திய கிழக்கு

ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் – ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை!

  • October 6, 2025
  • 0 Comments

காசாவின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். காசாவில் அமைதியைக் கொண்டுவருவது தொடர்பில் பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் ஹமாஸ் இஸ்ரேலில் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகளை விடுதலை செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலும் தாக்குதல்கள் நடத்துவதை நிறுத்துவதாக குறிப்பிட்டிருந்தது. இதற்கிடையில் திடீரென நேற்று தாக்குதல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த இருவர் உட்பட 16 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும்  […]

இலங்கை

தெமட்டகொடையில் கைவிடப்பட்ட வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு

  • October 6, 2025
  • 0 Comments

தெமட்டகொடையில், களனி பள்ளத்தாக்கு ரயில் பாதைக்கு அருகில் கைவிடப்பட்ட ஒரு வீட்டிலிருந்து பல ஆயுதங்களை பம்பலப்பிட்டி காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 9mm துப்பாக்கி, இரண்டு உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் ஒரு T-56 மெகசின் ஆகியவற்றை அந்த இடத்திலிருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர். பொரல்லாவின் வனத்தமுல்லையில் இயங்கும் வனாத்தமுல்லே, துமிந்த தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் மோதலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். வனாத்தமுல்ல பகுதியில் இந்த இரண்டு […]

பொழுதுபோக்கு

குடும்பத்தோடு கிடா வெட்டி, பொங்கல் வைத்த தனுஷ்

  • October 6, 2025
  • 0 Comments

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 1ஆம் திகதி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துரங்கபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலில் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வழிபட்டு சென்றனர். இதையடுத்து படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இயக்குனரும், நடிகர் தனுஷின் தந்தை, தாய், தனுஷின் மகன்கள் யாத்ரா, லிங்கா மற்றும் செல்வராகவன் குடும்பத்தினர் […]

இலங்கை

இலங்கையின் அலரி, ஜனாதிபதி மாளிகைகளில் இருந்த பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டதா?

  • October 6, 2025
  • 0 Comments

இலங்கையின் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து பல மதிப்புமிக்க பொருட்கள் களவாடப்பட்டதாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். குறித்த பொருட்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். விழாவொன்றில் உரையாற்றிய அவர், இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். விஜேராம மாவத்தையில் உள்ள  உத்தியோகபூர்வ இல்லத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான […]

இலங்கை

மாத்தறை திக்வெல்லவில் பாடசாலை நீச்சல் குளத்தில் மூழ்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

  • October 6, 2025
  • 0 Comments

திக்வெல்லவில் உள்ள தனது பாடசாலையில் நீச்சல் குளத்தில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க முயன்ற 17 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்த மாணவன் திக்வெல்ல, விஜித மகா வித்தியாலயத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாணவர் தனது வகுப்பு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பந்து தற்செயலாக நீச்சல் குளத்தில் விழுந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். பந்தை எடுக்க தண்ணீரில் இறங்கிய போது அவரால் மேலே வர […]

மத்திய கிழக்கு

ட்ரம்பின் காசா திட்டம் குறித்து இஸ்ரேல் , ஹமாஸ் பிரதிநிதிகள் இடையே எகிப்தில் பேச்சுவார்த்தை

  • October 6, 2025
  • 0 Comments

ட்ரம்பின் அமைதி திட்டம் குறித்து விவாதிப்பதற்காக இஸ்ரேல், ஹமாஸ் உயரதிகாரிகள் எகிப்தில் ஒன்றுகூடியுள்ளனர். ஹமாஸ் – இஸ்ரேல் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 20 அம்ச அமைதி திட்டத்தை பரிந்துரைத்தார். கடந்த 30ஆம் திகதி வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புதல் தெரிவித்தார். இந்தநிலையில் ஹமாஸ் 20 அம்ச திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக விவாதிக்க மத்தியஸ்த […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

பிரான்ஸின் புதிய பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) பதவி விலகினார்!

  • October 6, 2025
  • 0 Comments

பிரான்ஸின் புதிய பிரதமர் செபஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) இன்று தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பிரான்சுவா பெய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்த பிறகு பதவியேற்ற அவர் 26 நாட்களுக்குள் மேற்படி முடிவெடுத்துள்ளார். இது அரசியல் களத்தில் அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை ஒரு மணி நேரம் சந்தித்த பின்னர் எலிசி அரண்மனையில் வைத்து இராஜினாமா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்  அவரின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அந்நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் கைது!

  • October 6, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் இன்று  கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் மல்லாகத் பகுதியைச் சேர்ந்தவராவார். யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக நிலப் பத்திரம் எழுதியதற்காக அந்தப் பெண் வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட வழக்கறிஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு, விசாரணைகளுக்குப் பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தியா

இந்தியாவின் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளிகள் பலி

  • October 6, 2025
  • 0 Comments

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை(05) சவாய் மான் சிங் (SMS) மருத்துவமனையின் சிறப்பு சிகிச்சை பிரிவில் (trauma center) ஏற்பட்ட மின்சார கோளாறால் தீப்பற்றியதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சம்பவத்தின் போது தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 13 பேர் அருகிலிருந்த நோயாளிகள் தங்குமிடத்தில் இருந்தனர். தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது நோயாளிகள் தங்குமிடம் முழுவதும் புகை சூழ்ந்திருந்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் […]